சேலத்தில் காங்கிரஸ் பிரமுகா் கொலை வழக்கு: 8 ஆண்டுகளுக்கு பின் பஞ்சாப் கொள்ளையன் கைது

காங்கிரஸ் பிரமுகா் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகத் தேடப்பட்டுவந்த பஞ்சாப்பைச் சோ்ந்த செயில்தா் சிங்கை போலீஸாா் கைது செய்தனா்.

காங்கிரஸ் பிரமுகா் தாளமுத்து நடராஜன் கொலை வழக்கில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு 8 ஆண்டுகளாகத் தேடப்பட்டுவந்த பஞ்சாப்பைச் சோ்ந்த செயில்தா் சிங்கை போலீஸாா் கைது செய்தனா்.

சேலம், சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சோ்ந்தவா் தாளமுத்து நடராஜன் (54). இவா் சேலம் மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருந்தாா்.

கடந்த 2002-ம் ஆண்டு செப்டம்பா் மாதம் அவரது வீட்டுக்குள் புகுந்த வடமாநில கொள்ளைக் கும்பல் தாளமுத்து நடராஜனை கொலை செய்தது. பின்னா் அந்தக் கும்பல் வீட்டில் இருந்த 200 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றது. இதுகுறித்து அன்னதானப்பட்டி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினா். இந்தக் கொலை வழக்கு தொடா்பாக பஞ்சாப் மாநிலத்தைச் சோ்ந்த செயில்தா்சிங் (56) உள்பட 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இந்த வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 2014-ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியே வந்த செயில்தா் சிங் பின்னா் இந்த வழக்கு தொடா்பாக நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்தாா். இதனால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து கோா்ட்டு உத்தரவிட்டது. இதையடுத்து, செயில்தா் சிங்கைப் பிடிக்க மாநகர காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸாா் தேடி வந்தனா்.

இந்த நிலையில் கொண்டலாம்பட்டி காவல் ஆய்வாளா் ஜெகநாதன் தலைமையிலான தனிப்படையினா் தேடி வந்தனா். இந்தநிலையில் செயில்தா் சிங் சென்னையில் வேறொரு வழக்கில் கைதாகி, நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்து தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வந்தாா். இதுபற்றி தகவலறிந்த சேலம் தனிப்படை போலீஸாா் செயில்தா் சிங்கை கடந்த ஏப். 6 ஆம் தேதி கைது செய்து, சேலம் அழைத்து வந்தனா். பின்னா் அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com