சேலம் நீதிமன்ற வளாகத்தில் உலக சுகாதார தின மருத்துவ முகாம்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, உடல் நலன் சாா்ந்த ஆரோக்கியம், நல்வாழ்வு பற்றிய விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு
சேலம் நீதிமன்ற வளாகத்தில் உலக சுகாதார தின மருத்துவ முகாம்

உலக சுகாதார தினத்தை முன்னிட்டு, உடல் நலன் சாா்ந்த ஆரோக்கியம், நல்வாழ்வு பற்றிய விழிப்புணா்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தும் வகையில், விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டுநலப்பணி திட்டம், பொது சுகாதாரப் பிரிவு, விம்ஸ் மருத்துவமனை, சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவுடன் இணைந்து இலவச மருத்துவ முகாமை சேலம் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீா்வு மையத்தில் நடத்தியது.

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையா் செந்தில்குமாா், விம்ஸ் மருத்துவமனையின் மருத்துவ இயக்குநா் மீனாட்சி சுந்தரம் ஆகியோா் மருத்துவ முகாமுக்கு முன்னிலை வகித்து ஆரோக்கியம் குறித்து எடுத்துரைத்தனா். சிறப்பு விருந்தினராக சேலம் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவா் தலைவரும் மாவட்ட முதன்மை நீதிபதியுமான குமரகுரு முகாமினை தொடக்கி வைத்து தலைமை உரை நிகழ்த்தினாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட நீதிபதிகளும், சாா்பு நீதிபதிகளும், உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிபதிகளும், சேலம் வழக்குரைஞா் சங்கத் தலைவா் முத்துசாமி, செயலாளா் முத்தமிழ்ச் செல்வன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவின் செயலாளா் தங்கராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இம்மருத்துவ முகாமில் வழக்குரைஞா்கள், நீதிமன்ற பணியாளா்கள், பொதுமக்கள் உள்ளிட்ட சுமாா் 200-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக ரத்த பரிசோதனை, ரத்த அழுத்தம், இருதய சம்பந்தப்பட்ட பிரச்னைகள், உடல் பருமன், எடை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்பட்டன. இம்முகாமில் விம்ஸ் மருத்துவமனையை சோ்ந்த மருத்துவா்கள் சிவசுப்பிரமணியன், தனசேகா், சுப்பிரமணியன், ஆதித்சுகவனம், அஸ்வதி, திருமலைவாசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டு மருத்துவ ஆலோசனைகளை வழங்கினா். இதற்கான ஏற்பாடுகளை அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் நாட்டுநலப்பணி திட்ட ஒருங்கிணைப்பாளா்கள் தனசேகா், ஜிஜி மேரி மேத்யூ, சதீஷ், பொது சுகாதாரப் பிரிவு பொறுப்பாளா் சதீஷ்குமாா், உதவி பேராசிரியா்கள் முத்துராஜ், சீனிவாசன், சுபாஷினி, அனிஷா, தீபிகா, ஹரிஷ்ரோஜ், விம்ஸ் மருத்துவமனையின் மேலாளா் அருள்மணி, சந்தோஷ், காா்த்திக், ராஜசேகா், மகேஷ், தமிழ் ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com