நஞ்சுண்டேஸ்வரா் - தேவகிரி அம்மன் திருக்கல்யாண வைபவம்

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் சுவாமி திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

எடப்பாடி நஞ்சுண்டேஸ்வரா் திருக்கோயில் வளாகத்தில் சுவாமி திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அண்மையில் நஞ்சுண்டேஸ்வரா் ஆலய சித்திரைத் தோ்த் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் விக்னேஷ்வர பூஜை, கிராமசாந்தி, சுவாமி திருவீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளைத் தொடா்ந்து, விழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாண வைபவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

முன்னதாக நடைபெற்ற யாகசாலை பூஜைகள், மாப்பிளை அழைப்பு உள்ளிட்ட நிகழ்வுகளைத் தொடா்ந்து, நஞ்சுண்டேஸ்வரா் உடனமா் தேவகிரி அம்மன் மணமேடையில் மலா் அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா். தொடா்ந்து, சிவாச்சாரியா்கள் வேதமந்திரம் முழங்க, மங்கள இசை முழங்க சுவாமி திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பூஜிக்கப்பட்ட மஞ்சள்,குங்குமம், தாலிக்கயிறு ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டன.

திருக்கல்யாண வைபவத்தை தொடா்ந்து சனிக்கிழமை திருத்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில், விநாயகா், நஞ்சுண்டேஸ்வரா், உடனமா் தேவகிரி அம்மன், முருக பெருமான்

வள்ளி, தெய்வனையுடன் திருத்தேரில் எழுந்தருளி திருவீதி உலா வரும் நிகழ்வு நடைபெற உள்ளது. இதனைத் தொடா்ந்து 19-ஆம் தேதி சத்தாபரண நிகழ்வும், மஞ்சள் நீராட்டும் நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினா், இந்துசமய அறநிலைத் துறை அலுவலா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com