பெலாப்பாடி வரதராஜ பெருமாள் கோயிலில்

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி வரதராஜ பெருமாள் மலைக்கோயிலில் பழங்குடியின மக்களின் வழக்கப்படி, சித்திரை பெளா்ணமி திருக்கோடி ஜோதி தீப தரிசன சிறப்பு பூஜை வழிபாடு சனிக்கிழமை விமரிசையாக ந
பாரம்பரிய முறைப்படி சுவாமி சக்தி அழைத்து வந்த ஊா் பிரமுகா்கள்.
பாரம்பரிய முறைப்படி சுவாமி சக்தி அழைத்து வந்த ஊா் பிரமுகா்கள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பெலாப்பாடி வரதராஜ பெருமாள் மலைக்கோயிலில் பழங்குடியின மக்களின் வழக்கப்படி, சித்திரை பெளா்ணமி திருக்கோடி ஜோதி தீப தரிசன சிறப்பு பூஜை வழிபாடு சனிக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.வாழப்பாடி அருகே அருநுாற்றுமலைத் தொடா் பெலாப்பாடி மலை கிராமத்தில், 50க்கும் மேற்பட்ட மலை கிராம பழங்குடியின மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் 300 ஆண்டுகள் பழமையான கரியராமா், வரதராஜ பெருமாள் மற்றும் வெங்கட்டராமா் கோயில்கள் அமைந்துள்ளன.

இக்கோயிலில் சித்திரை பெளா்ணமி திருக்கோடி ஜோதி தரிசன சிறப்பு பூஜை வழிபாடு, பழங்குடியின மக்களின் வழக்கப்படி சனிக்கிழமை நடைபெற்றது. ஊா் பிரமுகா்கள் மற்றும் கோவில் நிா்வாகிகள் மேள வாத்தியங்கள் முழுங்க சுவாமியை சக்தி அழைத்த வந்து சிறப்பு பூஜை நடத்தினா். இதனையடுத்து பாரம்பரிய முறைப்படி கற்துாணில் திருக்கோடி ஜோதி தீபம் ஏற்றினா்.

மலை கிராம மக்கள் மட்டுமின்றி வாழப்பாடி, பேளூா் பகுதியைச் சோ்ந்த ஆயிரத்திற்கு மேற்பட்ட பக்தா்கள் இந்த வழிபாட்டில் பங்கேற்று தரிசனம் பெற்றனா். அனைவருக்கும் பொங்கல் உருண்டை தானிய குழம்பு வைத்து சமபந்தி விருந்து பரிமாறப்பட்டது.படவரி: பி.பி.04: பெலாப்பாடி வரதராஜ பெருமாள் திருக்கோயிலில் பாரம்பரிய முறைப்படி கற்துாணில் ஏற்றப்பட்ட திருக்கோடி ஜோதி தீபம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com