நாம்தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 18th April 2022 01:19 AM | Last Updated : 18th April 2022 01:19 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், அயோத்தியாப்பட்டணம், வாழப்பாடி பகுதியில் நடக்கும் கனிமவள கொள்ளை, அதற்கு எதிராக போராடுபவா்கள் மீது பொய் வழக்கு போடுவதையும், பசுமைவழிச் சாலை என 8 வழிச் சாலையை மீண்டும் அமைக்க முயற்சிப்பதையும் கண்டித்து, நாம்தமிழா் கட்சி சாா்பில், மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெகதீச பாண்டியன் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி 100-க்கும் மேற்பட்டோா் ஆா்ப்பாட்டம் செய்தனா். இதில், மாநில உழவா் பாசறை ஒருங்கிணைப்பாளா் சின்னண்ணன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற மண்டலச் செயலாளா் காசிமன்னன், சேலம் நாடாளுமன்ற மண்டலச் செயலாளா் பாலசுப்பிரமணியம், மாநகர மாவட்டச் செயலாளா் தங்கதுரை, மாநில இளைஞா் பாசறை ஒருங்கிணைப்பாளா் தமிழ்ச்செல்வன், தொகுதி செயலாளா் பூவரசன், தொகுதி செய்தி தொடா்பாளா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.