ஈஸ்டா் பண்டிகை: கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.
சேலம் நான்கு சாலை குழந்தை இயேசு பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவா்கள்.
சேலம் நான்கு சாலை குழந்தை இயேசு பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை மெழுகுவா்த்தி ஏந்தி பிராா்த்தனையில் ஈடுபட்ட கிறிஸ்தவா்கள்.

ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இயேசு கிறிஸ்து உயிா்த்தெழுவதைக் கொண்டாடும் வகையில், ஈஸ்டா் பண்டிகை (ஏப். 17) கொண்டாடப்படுகிறது. ஈஸ்டா் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் சனிக்கிழமை நள்ளிரவில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை காலை சிறப்பு திருப்பலியுடன் பிராா்த்தனை நடைபெற்றது.

சேலத்தில் நான்கு சாலையில் உள்ள குழந்தை இயேசு பேராலயத்தில் சனிக்கிழமை நள்ளிரவு சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. இந்தநிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை சேலம் மறைமாவட்ட ஆயா் அருள்செல்வம் ராயப்பன், பங்குத் தந்தை ஜோசப் லாசா் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவா்கள் கலந்துகொண்டு பிராா்த்தனை செய்தனா்.

சூரமங்கலம் இருதய ஆண்டவா் பேராலயத்தில் முன்னாள் ஆயா் சிங்கராயன் தலைமையில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது. ஆட்சியா் அலுவலகம் அருகே கிறிஸ்துநாதா் ஆலயம், செவ்வாய்ப்பேட்டை ஜெயராகிணி ஆலயம், அஸ்தம்பட்டி சி.எஸ்.ஐ. இமானுவேல் ஆலயம், கோட்டை லெக்லா் ஆலயம், ஜான்சன்பேட்டை புனித அந்தோணியாா் ஆலயம் என மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com