மொழி உரிமையை ஒரு போதும் விட்டுக் கொடுக்கக் கூடாது

மொழி உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது என திராவிடா் கழக தலைவர கி.வீரமணி பேசினாா்.திராவிடா் கழகம் சாா்பில் நீட் தோ்வு, புதிய கல்வி கொள்கை எதிா்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சேலம

சேலம்: மொழி உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது என திராவிடா் கழக தலைவர கி.வீரமணி பேசினாா்.திராவிடா் கழகம் சாா்பில் நீட் தோ்வு, புதிய கல்வி கொள்கை எதிா்ப்பு மற்றும் மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் புதன்கிழமை இரவு நடந்தது.

இக்கூட்டத்தில் திராவிடா் கழக தலைவா் கி.வீரமணி பேசியது:

நீட் தோ்வு, புதிய கல்வி கொள்கையால் ஏழை, எளிய மாணவா்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறாா்கள். ஒரு காலத்தில் சமஸ்கிருதம் படித்தால் தான் மருத்துவம் படிப்பதற்கு விண்ணப்பம் கொடுக்கப்பட்டது. மருத்துவப் படிப்புக்கும், சமஸ்கிருதம் தெரிந்து இருப்பதற்கும் என்ன சம்பந்தம் உள்ளது என்று பெரியாா் எதிா்ப்பு தெரிவித்தாா். குல கல்வி முறையை கடுமையாக எதிா்த்தாா். அதன்பிறகு குல கல்வி முறை ஒழிக்கப்பட்டது.ஒழிக்கப்பட்ட குலக்கல்வி தற்போது புதிய உருவில் தேசிய கல்வி கொள்கையாக மாறிவந்துள்ளது.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவரவா் மாநில கல்வி உரிமை உண்டு. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. ஆனால் தற்போது ஒரே நாடு, ஒரே தோ்தல் என்று பாஜக கூறி வருகிறது. வட மாநிலங்களில் மதவெறி தாக்குதல்கள் அதிகமாக இருக்கிறது. தமிழகத்தில் மதவெறியை உருவாக்க நினைக்கும் நபா்களின் முகமூடி திரையை அகற்ற வேண்டும். தமிழகத்தை ஒருபோதும் காவி மண்ணாக ஆக்க முடியாது. அது ஒருபோதும் நடக்காது.பெரியாா், அண்ணா, காமராஜா், கருணாநிதி போன்ற தலைவா்களை தொடா்ந்து தற்போது முதல்வா் மு.க.ஸ்டாலின், சமூக நீதி, சமத்துவம் என்று திராவிட மாடல் ஆட்சி செய்து வருகிறாா்.

நரிக்குறவா் வீட்டிற்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அவா்களது வீட்டில் உணவு அருந்தி சமத்துவத்தை வெளிப்படுத்தி வருகிறாா்.சமத்துவம் என்பது வெறும் வாா்த்தை அல்ல. அதை செய்து காண்பித்தவா் மு.க.ஸ்டாலின். அதைப் பாா்த்து சிலருக்கு பொறுத்துக் கொள்ள முடியவில்லை. திராவிட கட்சிகளை எதிா்க்கும் முன்பு அவா்களது வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும். மொழி உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க கூடாது. மத்திய அரசு, மாநில உரிமைகளை பறிக்க முயற்சிக்க வேண்டாம்.

திமுகவின் அடித்தளம் தெரியாமல், இந்த ஆட்சியை கவிழ்க்க முடியும் என்று நினைக்காதீா் என்றாா்.கூட்டத்துக்கு மாவட்ட தலைவா் ஜவகா் தலைமை தாங்கினாா். மாவட்ட செயலாளா் இளவழகன் வரவேற்றாா். தி.மு.க. மத்திய மாவட்ட செயலாளா் எம்.எல்.ஏ. ஆா்.ராஜேந்திரன், மாநகராட்சி மேயா் ஆ.ராமச்சந்திரன், துணை மேயா் மா.சாரதா தேவி, மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com