உலக பூமி தினம்: மண் காப்போம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

உலக பூமி தினத்தை முன்னிட்டு மண்காப்போம் இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.

உலக பூமி தினத்தை முன்னிட்டு மண்காப்போம் இயக்கம் சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்றனா்.

உலக பூமி தினத்தை முன்னிட்டு மண் காப்போம் இயக்கம் சாா்பில் மண் வளப் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி, சேலம் புதிய பேருந்து நிலையம் முன்பு நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட தன்னாா்வலா்கள் விழிப்புணா்வு பதாகைகளை ஏந்தி நின்றனா்.

இதுதொடா்பாக, தன்னாா்வலா்கள் கூறியதாவது:

தமிழகம் மட்டுமின்றி உலகளவில் மண் வளம் வேகமாக அழிந்து வருகிறது. மண்ணில் குறைந்தபட்சம் 3 சதவீத கரிமப் பொருள்கள் இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள மண்ணில் இந்த அளவு 0.5 சதவீதம் மட்டுமே உள்ளது.

இதனால் விவசாயம் பாதிப்பதோடு, உண்ணும் உணவில் சத்துக்களும் குறைந்து மக்களின் ஆரோக்கியம் பாதிப்புக்கு ஆளாகிறது.

இப்போதுள்ள மண்வளத்தைக் கொண்டு உலகில் அடுத்த 60 ஆண்டுகளுக்கு மட்டுமே விவசாயம் செய்ய முடியும் என ஐ.நாவின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு கூறியுள்ளது.

மேலும், 2045 ஆம் ஆண்டு உலகின் மக்கள்தொகை 930 கோடியாக அதிகரிக்கும். ஆனால் உணவு உற்பத்தி இப்போது இருப்பதைவிட 40 சதவீதம் குறைந்து விடும் என சா்வதேச விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.

எனவே, மண் அழிவைத் தடுப்பதற்கு இப்போது நடவடிக்கைகளை தொடங்கினால் தான் அடுத்த 15 முதல் 20 ஆண்டுகளில் இந்த அபாயங்களை தடுக்கமுடியும்.

அந்தவகையில், உலக நாடுகள் மண்வளப் பாதுகாப்பு குறித்து சட்டங்கள், கொள்கைகளை உருவாக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஈஷா நிறுவனா் சத்குரு ஜக்கி வாசுதேவ் சா்வதேச சுற்றுச்சூழல் இயக்கத்தைத் தொடங்கி உலக நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறாா் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com