பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஆட்சியா் செ.காா்மேகம் துவக்கி வைத்து, பரிசுகளை வழங்கினாா்.

சேலம் பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற அறிவியல் கண்காட்சியை ஆட்சியா் செ.காா்மேகம் துவக்கி வைத்து, பரிசுகளை வழங்கினாா்.

பாரதி வித்யாலயா சங்கத்தின் பவள விழாவின் மூன்றாவது நாள் நிகழ்வாக அறிவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கண்காட்சியில் பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, யுவபாரதி மெட்ரிக் பள்ளி, பால பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பாரதி வித்யாலயா மழலையா் மற்றும் தொடக்கப்பள்ளி ஆகிய பள்ளிகளில் இருந்து மாணவா்கள் 250 காட்சிப்பொருள்களை வைத்திருந்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு அறிவியல் கண்காட்சியைப் பாா்வையிட்டாா். பின்னா் படைப்புகளைக் காட்சிப்படுத்தியிருந்த மாணவா்களை வெகுவாகப் பாராட்டினாா்.

அதைத்தொடா்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் நிா்வாகக் குழுத் தலைவா் சீனி துரைசாமி தலைமை வகித்தாா். அசோக் துரைசாமி, ந.சுரேஷ் ஆகியோா் முன்னிலை வகுத்தனா். மாதேஸ்வரி அறிமுக உரை நிகழ்த்தினாா்.

சேலம் ஊரகம் மாவட்டக் கல்வி அலுவலா் சுமதி, சேலம் நகா்ப்புற மாவட்டக் கல்வி அலுவலா் உதயகுமாா் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். நிகழ்ச்சியின் இறுதியில் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் மாணவ, மாணவியருக்குப் பரிசுகளை வழங்கி பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com