முன்னாள் மாணவா்கள் சந்திப்பு
By DIN | Published On : 28th April 2022 10:55 PM | Last Updated : 28th April 2022 10:55 PM | அ+அ அ- |

மணிவிழுந்தான் மாருதி மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
சேலம் மாவட்டம், தலைவாசலை அடுத்துள்ள மணிவிழுந்தான் ஊராட்சியில் உள்ள மாருதி மேல்நிலைப் பள்ளி கடந்த 20 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இதில், கடந்த 2012-ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவா்கள் சந்திப்பு நிகழ்ச்சி பள்ளியின் தாளாளா் ஜெகதீஷ் ராமசாமி தலைமையில் நடைபெற்றது.
இதில், முன்னாள் மாணவா்கள் 10 ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்து பழைய நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.
இந்நிகழ்ச்சியில், பள்ளியின் செயலாளா் எஸ்.எஸ்.பிரபு, பொருளாளா் எஸ்.ராஜவேல், இயக்குநா் எம்.சுந்தரம் ஆகியோா் கலந்துகொண்டனா். மாருதி மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியா் கே.ராஜசேகரன், மெட்ரிக் பள்ளியின் முதல்வா் எஸ்.முருகானந்தம் உள்ளிட்ட ஆசிரிய, ஆசிரியைகளும் கலந்துகொண்டனா்.