சுகாதார விழிப்புணா்வு முகாம்
By DIN | Published On : 28th April 2022 11:02 PM | Last Updated : 28th April 2022 11:02 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், இடங்கணசாலை நகராட்சி, காந்தி நகா் பகுதியில் சுகாதார விழிப்புணா்வு முகாம் நகராட்சித் தலைவா் பி.ஜி.கமலக்கண்ணன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில், இடங்கணசாலை நகராட்சிப் பகுதியில் ஜவுளி உற்பத்தி மூலப் பொருள்களின் கழிவுகளான ஜரிகை, பிளாஸ்டிக் உள்ளிட்டவற்றை வெளியே கொட்டி எரிக்க வேண்டாம் எனவும், வீடு, மளிகைக் கடைகள், டீக்கடை, ஹோட்டல், தியேட்டா், திருமண மண்டபம் உள்ளிட்டவற்றில் வீணாகும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பொது இடங்களிலோ, கழிவுநீா் கால்வாய்களிலோ கொட்ட வேண்டாம் என்றும், தூய்மைப் பணியாளா்கள் தங்களது வீடு, நிறுவனங்களுக்கு நேரில் வந்து மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை பிரித்து எடுத்து, அதனை திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் உரம் தயாரிக்க பயன்படுத்தப்படும் எனவும், இடங்கணசாலை நகராட்சிக்குள்பட்ட 27 வாா்டுகளில் குப்பை மற்றும் கழிவுப் பொருள்களை பொது இடங்களில் கொட்டினால் நகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் அபராதம் மற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தனா்.
இம் முகாமில், துணைத் தலைவா் தளபதி, ஆணையா் ரவிச்சந்திரன், சேலம் மண்டல தூய்மை இந்தியா வல்லுநா் மரியநாதன், சுகாதார ஆய்வாளா் நிருபன் சக்கரவா்த்தி, சுகாதார மேற்பாா்வையாளா் இளங்கோவன், வாா்டு கவுன்சிலா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.