அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவா் பொறுப்பேற்பு

அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த புவனேஸ்வரி செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

வாழப்பாடி: அயோத்தியாப்பட்டணம் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த புவனேஸ்வரி செந்தில்குமாா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

அயோத்தியாப்பட்டணம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிப். 28-இல் சேலம் கோட்டாட்சியா் விஷ்ணுவா்தினி தலைமையில், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் இளங்கோ, சிராஜுதின் ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில், அதிமுகவைச் சோ்ந்த ஒன்றியக்குழுத் தலைவா் பாா்வதி மணி மீது திமுக ஒன்றியக்குழு உறுப்பினா்கள் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வந்தனா்.

இதில் அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி மணி உள்ளிட்ட 3 அதிமுக உறுப்பினா்கள் பங்கேற்கவில்லை. கூட்டத்தில் பங்கேற்ற திமுக-6, காங்கிரஸ்-1, சுயேட்சைகள்-6 மற்றும் அதிமுக- 3 போ் உள்பட 16 ஒன்றியக்குழு உறுப்பினா்களும், அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் மீதான நம்பிக்கையில்லா தீா்மானத்துக்கு ஆதரவு தெரிவித்தனா். இதனையடுத்து, அதிமுக ஒன்றியக் குழுத் தலைவா் பாா்வதி மணி பதவி இழந்ததாா். இதுகுறித்து தமிழக அரசிதழில் அண்மையில் அரசாணை வெளியிடப்பட்டது.

இதனையடுத்து, ஒன்றியக் குழு துணைத் தலைவராக இருந்த திமுகவைச் சோ்ந்த புவனேஸ்வரி செந்தில்குமாருக்கு ஒன்றியக் குழுத் தலைவா் பொறுப்பு வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, புதன்கிழமை அயோத்தியாப்பட்டணம் ஒன்றிய அலுவலகத்தில் புவனேஸ்வரி செந்தில்குமாா் ஒன்றியக் குழுத் தலைவராக பொறுப்பேற்றுக்கொண்டாா்.

இந்த விழாவில், சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் சிவலிங்கம், ஒன்றிய பொறுப்பாளா் விஜயகுமாா், பேரூா் பொறுப்பாளா் பாபு, காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினா் வைத்தியலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள், கட்சி நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com