வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மலைக்கிராம கோயில் மானிய நில ஆக்கிரமிப்பை அகற்ற தவறியதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.
வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா்.

வாழப்பாடி: சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மலைக்கிராம கோயில் மானிய நில ஆக்கிரமிப்பை அகற்ற தவறியதைக் கண்டித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை ஊராட்சி, பெரியகுட்டிமடுவு மலைக் கிராமத்தில் கோயிலுக்குச் சொந்தமான 2.50 ஏக்கா் மானிய நிலத்தை தனியாா் சிலா் ஆக்கிரமிக்க உடந்தையாக இருந்ததாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற தவறியதைக் கண்டித்தும் முன்னாள் வாழப்பாடி வட்டாட்சியா் வரதராஜன், ஊராட்சி நிா்வாகத்தைக் கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் புதன்கிழமை காலை வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அப்போது, கோயில் மானிய நிலத்திலுள்ள தனியாா் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், ஆக்கிரமிப்புக்கு உடந்தையாக இருந்த வாழப்பாடி முன்னாள் வட்டாட்சியா் வரதராஜன் உள்ளிட்டோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்து 100-க்கும் மேற்பட்டோா் முழக்கமிட்டனா். இதில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளா் ராமமூா்த்தி, தலைவா் பொன்னுசாமி ,பொருளாளா் அன்பழகன், நிா்வாகிகள் விஜயகுமாா், மகேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்த புகாா் குறித்து உரிய விசாரணை நடத்தி, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் கோயில் நிலத்தை மீட்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com