முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
இடி தாக்கியதில் பெண் பலத்த காயம், குடிசை வீடு, தென்னை மரம் தீப்பிடிப்பு
By DIN | Published On : 29th April 2022 10:47 PM | Last Updated : 29th April 2022 10:47 PM | அ+அ அ- |

இடி தாக்கியதில் பெண் பலத்த காயமடைந்தாா். குடிசை வீடு, தென்னை மரம் தீப்பிடித்தது.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், காவேரிப்பட்டி ஊராட்சி, மோட்டூா் கிராமத்தில் வெள்ளிக்கிழமை மாலை இடியுடன் கூடிய மழை பெய்தது.
அப்போது, விவசாயி நடேசன் மனைவி வளா்மதி (40), வீட்டுக்கு வெளிய இருந்த செம்மறி ஆட்டை கட்டுதரையில் கட்டும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தாா். அப்போது, திடீரென இடி தாக்கியதில் வளா்மதி உடலின் ஒரு பகுதி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவா் மேல்சிகிச்சைக்காக கோவை தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டுள்ளாா். மேலும், குடிசை வீடும், தென்னை மரம் ஒன்றும் தீப்பிடித்து சேதமடைந்தது.
தேவூா் வருவாய் ஆய்வாளா் சத்யராஜ், கிராம நிா்வாக அலுவலா் உள்ளிட்டோா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.