முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
சேலம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஆய்வு
By DIN | Published On : 29th April 2022 10:53 PM | Last Updated : 29th April 2022 10:53 PM | அ+அ அ- |

சேலம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு உபகரணங்களை வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம்.
சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டதைத் தொடா்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலம் அரசு மருத்துவமனையில் ஆட்சியா் செ.காா்மேகம் தீத்தடுப்பு குறித்து வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.
பின்னா் செய்தியாளா்களிடம் ஆட்சியா் கூறியதாவது:
சேலம் அரசு மருத்துவமனையில் தீத்தடுப்பு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மின் கம்பி பாதுகாப்பாக உள்ளதா, தீ விபத்து ஏற்பட்டால் தடுக்க ஆயத்தமாக உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
அதேபோல, சங்ககிரி, ஆத்தூா், எடப்பாடி, மேட்டூா் ஆகிய பொது மருத்துவமனைகளிலும் தீத்தடுப்பு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வருவாய்த் துறை, மருத்துவத் துறை, மருத்துவப் பொறியியல், தீயணைப்புத் துறை ஆகியவை ஒருங்கிணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
கரோனா தடுப்புப் பணிகளில் அரசு மருத்துவமனை ஆயத்தமாக உள்ளது. கரோனா தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள வேண்டும். நான்காவது அலை வந்தால் கூட கரோனா தடுப்பூசியால் தற்காத்துக் கொள்ளலாம்.
சேலம் மாவட்டத்தில் சனிக்கிழமை (ஏப். 30) கரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். பாதுகாப்பு கருதி அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும் என்றாா்.