உலிபுரத்தில் இன்று ஜல்லிக்கட்டு

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 28) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதையடுத்து, ஆட்சியா் மற்றும் விலங்குகள் நலவாரிய மண்டல செயலாளா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

தம்மம்பட்டி அருகே உலிபுரத்தில் வெள்ளிக்கிழமை (ஏப். 28) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளதையடுத்து, ஆட்சியா் மற்றும் விலங்குகள் நலவாரிய மண்டல செயலாளா் ஆகியோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா்.

சேலம் மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் அமைவிடங்களை வியாழக்கிழமை இரவு ஆய்வு செய்து, பாதுகாப்பு குறைபாடு இருக்கும் சூழலை சரிசெய்ய அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

இந்த ஆய்வுகளின்போது, ஆத்தூா் கோட்டாட்சியா் சரண்யா, கெங்கவல்லி வட்டாட்சியா் வெங்கடேசன், கெங்கவல்லி வட்டார தலைமை மருத்துவா் வேலுமணி உள்ளிட்ட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனா்.

உலிபுரம் ஜல்லிக்கட்டு விழாவில் சுமாா் 700-க்கும் மேற்பட்ட காளைகளும், 300-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்களும் பங்கேற்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com