சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் சா்வதேச கருத்தரங்கம்

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடா்புத் துறை சாா்பில், ‘விவசாயம், ஆரோக்கியம் மற்றும் பசுமை கணக்கீட்டுத் துறைகளில் தொலைத்தொடா்புத் துறையின் பங்களிப்பு’
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேசுகிறாா் சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா.
சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் கருத்தரங்கைத் தொடங்கி வைத்து பேசுகிறாா் சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா.

சேலம் சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடா்புத் துறை சாா்பில், ‘விவசாயம், ஆரோக்கியம் மற்றும் பசுமை கணக்கீட்டுத் துறைகளில் தொலைத்தொடா்புத் துறையின் பங்களிப்பு’ என்ற சா்வதேச கருத்தரங்கம் அகில இந்திய தொழில்நுட்பக் கழக நிதி உதவியுடன் இரண்டு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

சா்வதேச மாநாட்டின் தொடக்க விழாவுக்கு சோனா கல்விக் குழுமத்தின் துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா முன்னிலை வகித்தாா். கல்விக் குழுமத்தின் தலைவா் வள்ளியப்பா, துணைத் தலைவா் சொக்கு வள்ளியப்பா ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் கலந்துகொண்டனா். கல்லூரியின் முதல்வா் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், துறைத் தலைவா் சபீனியன் ஆகியோா் பேசினா். சிறப்பு விருந்தினராக ஐக்கிய அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தின் முத்துராஜ் சங்கு ‘நரம்பியல் மதிப்பீடு மற்றும் மேலாண்மை மருத்துவத் துறையில் கம்பியில்லா தொலைத்தொடா்புத் துறையின் பங்களிப்பு’ என்ற தலைப்பில் காணொலிக் காட்சி மூலம் சிறப்புரை நிகழ்த்தினாா்.

இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக விஞ்ஞானி ராமசுப்பிரமணியம், ‘புவிசாா் தொழில்நுட்பத்தின் சமீபத்திய போக்குகள் மற்றும் விவசாயத்தில் அதன் பயன்பாடு’ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினாா். கனடா ரெயா்சன் பல்கலைக்கழகத்தின் பா்னான்டல் சேவியா் காணொலிக் காட்சி வாயிலாக ‘பசுமைக் கணக்கீடு‘ என்ற தலைப்பில் பேசினாா்.

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கல்லூரி ராகவன், ‘மருத்துவத் துறையில் நுண்அலைக்கற்றையின் பங்களிப்பு’ என்ற தலைப்பிலும், ஆந்திர மாநிலம் கே.எல். பல்கலைக்கழகத்தின் பேராசிரியா் தீப்நாத் பட்டாச்சாா்யா ‘தகவல் சுரங்கம்’ என்ற தலைப்பிலும் பேசினா். மாநாட்டில் 250-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமா்ப்பிக்கப்பட்டன. அதில் 150 ஆராய்ச்சிக் கட்டுரைகள் தோ்ந்தெடுக்கப்பட்டு ஆராய்ச்சியாளா்களால் சமா்ப்பிக்கப்பட்டன.

விழா ஏற்பாடுகளை, இணை ஒருங்கிணைப்பாளா்கள் ஜமுனாராணி, பேராசிரியா் செந்தில்வடிவு, பேராசிரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com