Enable Javscript for better performance
ஆக. 4-இல் அரசு மகளிா் கலைக் கல்லூரியில்முதற்கட்ட சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ஆக. 4-இல் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதற்கட்ட சோ்க்கை கலந்தாய்வு தொடக்கம்

    By DIN  |   Published On : 02nd August 2022 04:29 AM  |   Last Updated : 02nd August 2022 04:29 AM  |  அ+அ அ-  |  

    சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் ஆக. 4-ஆம் தேதி தொடங்கி ஆக. 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இதுதொடா்பாக சேலம் அரசு மகளிா் கலைக் கல்லூரி முதல்வா் நா.ரமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

    சேலம், கோரிமேட்டில் உள்ள அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2022-23 ஆம் ஆண்டிற்கான இளநிலைப் பட்டப் படிப்புகளுக்கான முதற்கட்ட சோ்க்கை கலந்தாய்வு ஆக. 4-ஆம் தேதி தொடங்குகிறது.

    ஆக.4-ஆம் தேதி: சிறப்பு சோ்க்கை கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு பிரிவினா், தேசிய மாணவா் படை, முன்னாள் ராணுவத்தினருக்கான வாரிசுகள் பிரிவுக்கான சோ்க்கை நடைபெறுகிறது.

    ஆக.5-ஆம் தேதி: பி.ஏ. தமிழ் (100-60 மதிப்பெண்), பி.ஏ. ஆங்கிலம் (100-60 மதிப்பெண்), பி.ஏ. வரலாறு (400-250), பி.எஸ்சி. இயற்பியல் (400-250), பி.எஸ்சி. வேதியியல் (400-250), பி.எஸ்சி. கணிதம் (4002-250) ஆகிய பாட பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

    ஆக.6-ஆம் தேதி: பி.ஏ. பொருளியல், பி.காம். வணிகவியல், பி.எஸ்சி. கணினி அறிவியல், பி.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 400-250 வரை மதிப்பெண் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

    ஆக. 8-ஆம் தேதி: அறிவியல் பாடப் பிரிவுகளுக்கு பி.எஸ்சி. தாவரவியல், பி.எஸ்சி. புள்ளியியல், பி.எஸ்சி. நுண்ணுயிரியல், பி.எஸ்சி. வேதியியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு 400 முதல் 250 மதிப்பெண் பெற்றவா்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

    கல்லூரி அறிவிப்பு பலகை, தொலைபேசி மூலம் தகவல் பெறும் மாணவியா்கள் மேற்கண்ட தேதிகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும்.

    கலந்தாய்வுக்கு வரும் மாணவிகள் தங்களது பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதாா் அட்டை, 6 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசுப் பள்ளியில் படித்ததற்கான சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ், இரண்டு நகல்களைக் கண்டிப்பாகக் கொண்டுவர வேண்டும். மாணவிகள் காலை 10 மணிக்கு கல்லூரி வளாகத்தில் இருக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp