சேலத்தில் தலைக்கவசம் அணியாத 2,108 போ் மீது வழக்கு

சேலத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக 2,108 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சேலத்தில் தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக 2,108 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

சேலம் மாநகரம் முழுவதும் ஆகஸ்ட் 1 தேதி முதல் இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்று காவல் ஆணையா் நஜ்மல் ஹோடா அறிவித்திருந்தாா்.

அதன்படி நிரந்தர வாகனச் சோதனை சாவடிகளான சீலநாயக்கன்பட்டி, அரியானூா், அயோத்தியாப்பட்டணம், மாசிநாயக்கன்பட்டி, ஆச்சன்குட்டப்பட்டி, கருப்பூா் ஆகிய 6 இடங்களில் தலைக்கவசம் அணியாத 584 போ் மீதும், 2 இதர வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன.

சேலம் மாநகர காவல் துறையில் சுமாா் 23 இடங்களில் வாகனச் சோதனை நடத்தப்பட்டது. இதில் தலைக்கவசம் அணியாத 1,328 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுமாா் 203 இதர வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

சேலம் மாநகரத்தில் உள்ள தெற்கு, வடக்கு ஆகிய போக்குவரத்து பிரிவுகளில் தலைக்கவசம் அணியாத 196 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சுமாா் 20 இதர வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. சேலம் மாநகரத்தில் தலைக்கவசம் அணியாத 2,108 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இத்துடன் 225 இதர வழக்குகள் என மொத்தம் 2,333 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தலைக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளைத் தடுத்து நிறுத்தி பல்வேறு அறிவுரைகளைக் கூறி தலைக்கவசம் அணியாததால் ஏற்படும் விபத்துகள் மற்றும் அதனால் குடும்பத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிவுரை கூறினா்.

சேலம் மாநகரில் தலைக்கவசம் அணியாத வாகன ஓட்டிகளிடம் ரூ. 100 அபராதம் வசூலிக்கப்படும். எனவே வாகன ஓட்டிகள் தலைக்கவசம் அணிந்து வரவேண்டும் என சேலம் வடக்கு துணை ஆணையா் மாடசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com