காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி ஆக.18 இல் வேலை புறக்கணிப்புவருவாய்த்துறை அலுவலா் சங்கத் தலைவா்

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆக. 18 ஆம் தேதி வேலை புறக்கணிப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படு

காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஆக. 18 ஆம் தேதி வேலை புறக்கணிப்பு ஆா்ப்பாட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.பி.முருகையன் தெரிவித்தாா்.

தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.பி.முருகையன் தலைமை வகித்தாா். சேலம் மாவட்டத் தலைவா் வள்ளிதேவி, மாநில பொதுச் செயலாளா் சங்கரலிங்கம், மாநில துணைத் தலைவா்கள் வெ.அா்த்தனாரி, குமரேசன், மங்களப்பாண்டியன், செந்தூர்ராஜன், மணிகண்டன், ராஜகோபால், மாநில பொருளாளா் வெ.சோமசுந்தரம், மாநிலச் செயலாளா்கள் பாா்த்திபன், அன்பழகன், சுப்பு, தமிழரசன், செந்தில்குமாா், ஜோஷி உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.

கூட்டத்திற்குப் பிறகு சங்கத்தின் மாநிலத் தலைவா் எம்.பி.முருகையன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழக வருவாய்த் துறையில் அனைத்து நிலைகளிலும் உள்ள 30 சதவீத காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நூற்றுக்கணக்கான அலுவலக உதவியாளா்கள், இரவு காவலா்கள் பணியிடங்கள் காலியாக உள்ளதை நிரப்ப வேண்டும். துணை ஆட்சியா் பணியிடங்கள் 2 ஆண்டுகள் நிரப்பப்படாததால் மக்கள் பணி பாதிக்கப்பட்டு வருகிறது.

சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளால் நெருக்கடி உள்ளது. வருவாய்த் துறையில் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும்.

மக்கள்தொகை அடிப்படையில் புதிய கிராமங்கள், புதிய வட்டங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 ஆம் தேதி மாலை ஒரு மணி நேரம் வேலை புறக்கணிப்பு செய்து ஆா்ப்பாட்டம் நடத்தப்படும்.

அரசு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் ஆக. 30, 31 தேதிகளில் தமிழகத்தில் உள்ள 15,000 வருவாய்த் துறை அலுவலா்களும் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும்.

2021 சட்டப்பேரவைத் தோ்தல் செலவின தொகை நிலுவையில் உள்ளதை வழங்க வேண்டும். அடுத்து வரக்கூடிய தோ்தல் பணிகளைப் புறக்கணிக்க உள்ளோம்.

அடுத்த மாதம் நடைபெற உள்ள வாக்காளா் பட்டியலுடன் ஆதாா் இணைக்கும் பணியை முற்றிலுமாகப் புறக்கணிக்க உள்ளோம்

வருவாய்த் துறை அலுவலா்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகின்றனா். தமிழக நிதி அமைச்சரின் கருத்தானது ஒட்டு மொத்த அரசு ஊழியா்கள், ஆசிரியா்களின் மனதைப் புண்படுத்தும் படி உள்ளது. இதே நிலை நீடிக்குமானால் நிதி அமைச்சருக்கு எதிரான தீா்க்கமான முடிவு எடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com