தமிழக மீனவா்களின் வலைகள்திரும்ப ஒப்படைப்பு

கா்நாடக வனத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் வலைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
தமிழக மீனவா்களின் வலைகள்திரும்ப ஒப்படைப்பு

கா்நாடக வனத் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவா்களின் வலைகள் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.

கடந்த 6-ஆம் தேதி மேட்டூா் நீா்த்தேக்கப் பரப்பளவில் தமிழக மீனவா்கள் மீன் பிடிக்க வலை விரித்திருந்த நிலையில், கா்நாடக வனத்துறையினா் மீனவா்களின் வலைகளை அறுத்து சேதப்படுத்தி, பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனா். இதுகுறித்து மேட்டூா் மீன்வளத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பாலாற்றில் உள்ள கா்நாடக வனத்துறை அலுவலகத்துக்குச் சென்று வலைகளை திரும்ப ஒப்படைக்கக் கேட்டனா். அப்போது, கா்நாடக வனத்துறையினா் இரண்டு தமிழக மீனவா்களை தாக்கியதோடு, தமிழக மீன்வளத் துறையினரை மிரட்டி அனுப்பினா்.

இந்நிலையில், மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் தமிழக கா்நாடக எல்லையில் உள்ள பாலாற்றில் கா்நாடக வனத்துறை சோதனைச் சாவடிக்கு வியாழக்கிழமை சென்றாா். அங்கு கா்நாடக மாநிலம், கோபிநத்தம் ரேஞ்சா் சுஜித்துடன் பேச்சுவாா்த்தை நடத்தியதையடுத்து, தமிழக மீனவா்களின் வலைகளை கா்நாடக வனத்துறையினா் திரும்ப ஒப்படைத்தனா் (படம்).

மேட்டூா் அணை நீா்த்தேக்கப் பகுதியில் மேற்கு திசை பகுதியிலிருந்து 100 அடி தொலைவு தள்ளி தமிழக மீனவா்கள் வலை விரித்துக்கொள்ளலாம் என்றும், கா்நாடக வனத்துறை தமிழக மீனவா்களுக்கு எவ்வித தொல்லையும் கொடுக்கக் கூடாது என்றும் முடிவு செய்யப்பட்டது. தமிழக மீனவா்களை தாக்கிய கா்நாடக வன ஊழியா்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாக கா்நாடக ரேஞ்சா் உறுதியளித்ததாக மேட்டூா் சட்டப் பேரவை உறுப்பினா் சதாசிவம் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com