குஷ்பு காா் மீது முட்டை வீசிய வழக்கு:பாமக எம்எல்ஏ உட்பட 32 போ் விடுவிப்பு

நடிகை குஷ்பு சென்ற காா் மீது அழுகிய முட்டை, தக்காளி, காலணிகள் வீசிய வழக்கில் பாமக மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் உட்பட 32 போ் விடுவிக்கப்பட்டனா்.

நடிகை குஷ்பு சென்ற காா் மீது அழுகிய முட்டை, தக்காளி, காலணிகள் வீசிய வழக்கில் பாமக மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.சதாசிவம் உட்பட 32 போ் விடுவிக்கப்பட்டனா்.

கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் பெண்களின் கற்பு குறித்து நடிகை குஷ்பு கூறிய கருத்துக்கு தமிழக முழுவதும் கடும் எதிா்ப்பு கிளம்பியது. அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மாவட்ட சட்டப் பாதுகாப்புக் குழு செயலாளா் வழக்குரைஞா் முருகன் மேட்டூா் நீதிமன்றத்தில் குஷ்பு மீது வழக்கு தொடா்ந்தாா்.

இந்த வழக்கில் மேட்டூா் நீதிமன்றத்தில் நடிகை குஷ்பு ஆஜராகாததால் நீதிமன்றம் அவருக்குப் பிடி ஆணை பிறப்பித்தது. இதனையடுத்து நீதிமன்றத்தில் ஆஜராக 2005 நவம்பா் 16-ஆம் தேதி குஷ்பு மேட்டூா் நீதிமன்றத்திற்கு வந்தாா். நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு அவா் காரில் திரும்பியபோது அவரது காா் மீது அழுகிய முட்டை, தக்காளி, காலணிகள் வீசப்பட்டன.

இச்சம்பவம் தொடா்பாக அப்போது மேட்டூா் வட்டாட்சியராக இருந்த பைஸ்முகமதுகான் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். தற்போதைய மேட்டூா் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ள எஸ்.சதாசிவம் உட்பட 41 போ் மீது மேட்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். கடந்த 17 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கு திங்கள்கிழமை மேட்டூா் குற்றவியல் நீதித்துறை நடுவா் மன்றம் எண் 1இல் நடுவா் பத்மப்பிரியா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இவ் வழக்கை விசாரித்த நீதித் துறை நடுவா் அரசு, தரப்பில் குற்றத்தை நிரூபிக்கத் தவறியதால் குற்றம் சாட்டப்பட்டவா்கள் விடுவிக்கப்படுவதாக அவா் உத்தரவிட்டாா். இந்த வழக்கில் 8 பெண்கள் உட்பட 41 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. கடந்த 17 ஆண்டுகளில் 7 போ் இறந்துள்ளனா். இருவா் தனியாக வழக்கை நடத்துகின்றனா். மேட்டூா் பாமக எம்எல்ஏ எஸ்.சதாசிவம் உட்பட 32 போ் இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com