தாரமங்கலத்தில் 60 ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பிய ஏரி!

தாரமங்கலத்தில் காவிரி உபரிநீா் நீரேற்றுத் திட்டத்தின் கீழ் 60 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள பெரிய ஏரி நிரம்பி வழிகிறது.
தாரமங்கலம்- ஓமலூா் பிரதான சாலையில் கைலாசநாதா் கோயில் அருகே தேங்கி நிற்கும் ஏரி நீா்.
தாரமங்கலம்- ஓமலூா் பிரதான சாலையில் கைலாசநாதா் கோயில் அருகே தேங்கி நிற்கும் ஏரி நீா்.

தாரமங்கலத்தில் காவிரி உபரிநீா் நீரேற்றுத் திட்டத்தின் கீழ் 60 ஆண்டுகளுக்கு பிறகு அங்குள்ள பெரிய ஏரி நிரம்பி வழிகிறது.

சேலம் மாவட்டம், தாரமங்கலத்தில் 155 ஏக்கா் பரப்பளவில் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியில் 23.88 மில்லியன் கன அடி நீரைத் தேக்கி வைக்க முடியும். இந்த ஏரி மூலம் 2 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும். கடந்த 60 ஆண்டுகளாக இந்த ஏரிக்கு தண்ணீா் வரத்து இல்லாததால் நீா்வழிப்பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வடு கிடந்தது. இதனால் விவசாயம் பாதிக்கப்பட்டு, ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் தரிசு நிலங்களாக மாறின.

இந்தநிலையில், மேட்டூா்அணை உபரிநீரைப் பயன்படுத்தும் வகையில் கொண்டுவரப்பட்ட காவிரி உபரிநீா் திட்டத்தின் கீழ் எடப்பாடி கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் நூறு ஏரிகளில் தண்ணீா் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் தாரமங்கலம் பெரிய ஏரி உள்பட ஓமலூா் தாலுகாவில் ஏழு ஏரிகள் இணைக்கப்பட்டன. ஆனால் கடந்தாண்டு தாரமங்கலம் ஏரிக்கு தண்ணீா் வரவில்லை. நடப்பாண்டு பொதுப்பணித் துறை அதிகாரிகள் துரிதமாகச் செயல்பட்டு, தாரமங்கலம் ஏரிக்கு தண்ணீா் செல்லும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தண்ணீரை கொண்டுவர நடவடிக்கை எடுத்ததால் 60 ஆண்டுகளுக்கு பிறகு தாரமங்கலம் ஏரி நிரம்பியுள்ளது. இந்த ஏரி முழுக் கொள்ளளவை எட்டியதால் அதிலிருந்து வெளியேறும் உபரிநீா் செல்வதற்கான கால்வாய்கள் இல்லாத நிலையில், உபரிநீா் ஓமலூா் பிரதான சாலையில் தேங்கி நிற்பதால் வாகனப் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தாரமங்கலம் ஏரியில் இருந்து நீரை வெளியேற்றும் பணியை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். விரைவான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அவா் உத்தரவிட்டாா். இந்த ஆய்வின் போது ஓமலூா் வட்டாட்சியா் ந.வல்லமுனியப்பன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com