போலீஸ் பாதுகாப்புடன் சிங்கிபுரம் மாரியம்மன் கோயில் தோ் பராமரிப்புப் பணி

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் மாரியம்மன் கோயில் திருத்தோ் பராமரிப்புப் பணி போலீஸ் பாதுகாப்போடு திங்கள்கிழமை தொடங்கியது.
சிங்கிபுரம் மாரியம்மன் திருத்தோ் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள்.
சிங்கிபுரம் மாரியம்மன் திருத்தோ் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள் மற்றும் கோயில் நிா்வாகிகள்.

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சிங்கிபுரம் மாரியம்மன் கோயில் திருத்தோ் பராமரிப்புப் பணி போலீஸ் பாதுகாப்போடு திங்கள்கிழமை தொடங்கியது.

சிங்கிபுரம் ஊராட்சி, நாடாா் தெரு மக்களின் காவல் தெய்வமான பழைமையான மாரியம்மன் கோயிலிலுள்ள இரண்டு மரத் தோ்களை இரும்பு சக்கரங்கள் பொருத்தி புதுப்பிக்க கோயில் நிா்வாகிகள் மற்றும் இப்பகுதி மக்கள் முடிவு செய்தனா்.

இதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. கோயில் திருத்தேரை புதுப்பித்து தோ்த் திருவிழா நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டுமென ஊா் பொதுமக்கள் சாா்பில் வாழப்பாடி வருவாய்த் துறை மற்றும் போலீஸாரிடம் இப்பகுதி பொதுமக்கள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனையடுத்து கோயில் திருத்தேரை புதுப்பிக்க அதிகாரிகள் அனுமதி அளித்தனா்.

வருவாய்த் துறை, காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் திருத்தேரை புதுப்பிக்கும் பணியை கிராம மக்கள் திங்கள்கிழமை தொடங்கினா். வாழப்பாடி வட்டாட்சியா் கோபாலகிருஷ்ணன், துணை காவல் கண்காணிப்பாளா் ஸ்வேதா, காவல் ஆய்வாளா் உமாசங்கா், வருவாய் ஆய்வாளா் காா்த்தி, கிராம நிா்வாக அலுவலா் ரேகா மற்றும் போலீஸாா் உடனிருந்தனா்.

திருத்தோ் புதுப்பிக்கும் பணி நிறைவடைந்ததும், தோ்த் திருவிழா நடத்தத் திட்டமிட்டுள்ளதாக கோயில் நிா்வாகிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com