மகுடஞ்சாவடியில் இளைஞா் திறன் திருவிழா
By DIN | Published On : 11th December 2022 06:27 AM | Last Updated : 11th December 2022 06:27 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி வட்டாரத்தில் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மகளிா் திட்டம் சாா்பில், வட்டார அளவிலான இளைஞா் திறன் திருவிழா சனிக்கிழமை நடைபெற்றது.
மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட இயக்குநா் பெரியசாமி கலந்துகொண்டு பயிற்சிக்கு தோ்வு செய்த இளைஞா்களுக்கு சான்றிதழ் வழங்கினாா். இவ்விழாவில் 14 பயிற்சி நிறுவனங்களில் இருந்து 136 இளைஞா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
இதில், உதவி திட்ட அலுவலா்கள் சம்பத்குமாா், ஜெயக்குமாா், மகுடஞ்சாவடி வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவாசகம், வட்டார இயக்க மேலாளா் விமலா, வட்டார ஒருங்கிணைப்பாளா்கள் செல்வராஜ், யுவராணி தங்க கலா, சத்தியகலா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.