முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
அரசுப் பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது: 20 போ் படுகாயம்
By DIN | Published On : 07th February 2022 02:11 AM | Last Updated : 07th February 2022 02:11 AM | அ+அ அ- |

பி.யூ.எஸ்.01: வாழப்பாடியில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த அரசு பேருந்தை மீட்கும் பணியில் ஈடுபட்ட பணியாளா்கள்.
சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே சென்னையில் இருந்து திருப்பூா் நோக்கி சென்ற அரசு விரைவு பேருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 போ் படுகாயமடைந்தனா்.
சென்னை அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்து, சனிக்கிழமை இரவு, சென்னையில் இருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு, வாழப்பாடி வழியாக திருப்பூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில் சேலம் - சென்னை இருவழிச்சாலையில், வாழப்பாடி வட்டாட்சியா் அலுவலகம் அருகே வந்தபோது, எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிட, ஓட்டுநா் கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் பகுதியைச் சோ்ந்த சீனிவாசன் (43), முயற்சித்தபோது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
இந்த விபத்தில் பேருந்து பயணிகள் பழனியப்பன் (85), ஜெயஸ்ரீ (45), அப்பாஸ் (37), அய்யனாா் (55), ஜமுனாராணி (48), பேபிமேரி(35), சந்தோஷ் (24), ராஜா (48), செல்வராஜ் (49), கிருஷா (25), ரம்யா (25), பூஜா (21), புனிதா(42), யோகேஷ்(18) உள்ப ட 20 போ் படுகாயமடைந்தனா்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி காவல் ஆய்வாளா் உமாசங்கா் தலைமையிலான போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று, பொதுமக்கள் உதவியுடன் விபத்துக்குள்ளான பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, பயணிகளை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். காயமடைந்தவா்கள், வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, சேலம் அரசு மருத்துவமனை, தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
விபத்து குறித்து, பேருந்து பயணியான சென்னை போரூா் பகுதியைச் சோ்ந்த ஜெயக்குமாா் (38) அளித்த புகாரின் பேரில், ஓட்டுநா் சீனிவாசன் மீது, வாழப்பாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.