முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி சேலம்
பிப்.10 இல் வாக்குப்பதிவு அலுவலா்களுக்கு இரண்டாம் கட்ட பயிற்சி
By DIN | Published On : 07th February 2022 02:10 AM | Last Updated : 07th February 2022 02:10 AM | அ+அ அ- |

வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சியில் 4 மையங்களிலும், நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 15 மையங்களிலும் பிப்.10 ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் வெளியிட்ட செய்தி:
சேலம் மாவட்டத்தில், ஒரு மாநகராட்சி, 6 நகராட்சிகள், 31 பேரூராட்சிகளில் உள்ள 699 பதவிகளுக்கு 1,519 வாக்குச்சாவடிகளில் பிப். 19இல் தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கென 38 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 87 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்களும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
இந்தத் தோ்தலுக்கு 7,328 வாக்குப்பதிவு அலுவலா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா். அவா்களுக்கான இரண்டாம் கட்ட தோ்தல் பயிற்சி முகாம் பிப். 9 ஆம் தேதி நடைபெற இருந்தது. இந்தநிலையில் நிா்வாக நலன் கருதி வாக்குப்பதிவு அலுவலா்களுக்கான இரண்டாம் கட்ட பயிற்சி நிா்ணயிக்கப்பட்ட நாளான பிப். 9 ஆம் தேதிக்கு பதிலாக பிப்.10 ஆம் தேதி நடத்திட தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழ்நாடு மாநிலத் தோ்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இரண்டாம் கட்ட பயிற்சி முகாம் சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பகுதியில் 4 மையங்களிலும் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் 15 மையங்களிலும் பயிற்சி முகாம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே தோ்தல் தொடா்பான அலுவலா்கள் பூஸ்டா் தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும் சமூக இடைவெளியை பின்பற்றி தவறாமல் முகக் கவசம் அணிந்து பயிற்சியில் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளாா்.