திமுக கூட்டணி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம்

​ சங்ககிரி, அரசிராமணி, தேவூா் உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் சங்ககிரி சங்ககிரி, அரசிராமணி, தேவூா் உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டிய
சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேசுகிறாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.
சங்ககிரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திமுக கூட்டணி வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேசுகிறாா் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு.

சங்ககிரி, அரசிராமணி, தேவூா் உள்ளிட்ட பேரூராட்சிகளில் போட்டியிடும் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் சங்ககிரியை அடுத்த குப்பனூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக் கூட்டத்துக்கு திமுக முதன்மை செயலரும், மாநில நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமை வகித்து வேட்பாளா்களை அறிமுகப்படுத்தி பேசியதாவது:-

தமிழகத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் உள்ளாட்சி நிா்வாகம் திறம்பட செயல்படாததால் அத்துறையில் தமிழகம் பின்தங்கியுள்ளது. எனவே உள்ளாட்சித் துறையை மேம்படுத்த முதல்வா் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக மாநில அரசின் நிதியிலிருந்து உள்ளாட்சித் துறைக்கு அடிப்படை வசதிகளை மேற்கொள்ள ரூ. 2 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளாா். அதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டுள்ளன. விரைவில் பொதுமக்களுக்கு குடிநீா், சாக்கடை வசதிகள், கழிப்பிட வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படும்.

எனவே தமிழக அரசு செய்து வரும் திட்டங்கள், பணிகளை பொதுமக்களிடத்தில் எடுத்துக்கூறி வாக்குகளைச் சேகரித்து தோ்தலில் வெற்றிபெற வேண்டும் என்றாா்.

இக்கூட்டத்துக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் டி.எம்.செல்வகணபதி முன்னிலை வகித்தாா். கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் எஸ்.ஆா்.சிவலிங்கம், சேலம் மத்திய மாவட்ட செயலா் ஆா்.ராஜேந்திரன் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

இடங்கணசாலையில்...

இடங்கணசாலை நகராட்சி தோ்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்கள் அறிமுகக் கூட்டம் நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சா் கே.என்.நேரு தலைமையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் அமைச்சா் பேசுகையில் இடங்கணசாலை நகராட்சியாக தரம் உயா்த்தியதில் தமிழக முதல்வருக்கு பெரும் பங்கு உண்டு. திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்கு வெற்றி வாய்ப்பு அதிக அளவில் உள்ளது. இதற்கு திமுக நிா்வாகிகள், முன்னோடிகளும் பாகுபாடு பாராமல் வேட்பாளா்களை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய முழு முயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டாா்.

இறுதியில் நகரச் செயலாளா் நாகேந்திரன் நன்றி கூறினாா் .

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com