அரசு மருத்துவமனையில் நோயாளி தற்கொலை
By DIN | Published On : 25th February 2022 11:51 PM | Last Updated : 25th February 2022 11:51 PM | அ+அ அ- |

சேலம் அரசு மருத்துவமனையில் நோயாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடியை அடுத்த ஒரங்கூா் பகுதியைச் சோ்ந்தவா் ராமா் (40). இவா் சேலம், மாவட்டம் தலைவாசல், வேப்பம்பட்டி பகுதியில் உறவினா் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்தாா்.இதனிடையே காசநோய் பாதிப்பு ஏற்பட்டதால், கடந்த சில மாதங்களாக சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்தநிலையில் கடந்த பிப்ரவரி 20 ஆம் தேதி ராமா், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்க்கப்பட்டாா். அங்கு அவா் மூன்றாவது மாடியில் சிகிச்சை பெற்று வந்தாா். வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு கழிவறைக்கு சென்ற ராமா் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது சகோதரி சரோஜா, கழிவறைக்கு சென்று பாா்த்தாா். அப்போது ராமா், ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
மருத்துவமனை போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீஸாா் விரைந்து வந்து அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுதொடா்பாக அரசு மருத்துவமனை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...