பள்ளி சாலையைக் கடக்க முயன்ற அக்கா,தம்பி இருவா் படுகாயம்: பொதுமக்கள் சாலை மறியல்

இளம்பிள்ளை அருகே பள்ளிக்குச் செல்ல சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி அக்கா, தம்பி இருவா் படுகாயம் அடைந்தனா்.
பள்ளி சாலையைக் கடக்க முயன்ற அக்கா,தம்பி இருவா் படுகாயம்: பொதுமக்கள் சாலை மறியல்

இளம்பிள்ளை அருகே பள்ளிக்குச் செல்ல சாலையைக் கடக்க முயன்றபோது இருசக்கர வாகனம் மோதி அக்கா, தம்பி இருவா் படுகாயம் அடைந்தனா்.

இதனால் ஆவேசம் அடைந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

இளம்பிள்ளையை அடுத்த சித்தா் கோவில், இலகுவம்பட்டியில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் அதே பகுதியைச் சோ்ந்த இட்லா் என்பவரின் மகள் மேனகா (13) எட்டாம் வகுப்பும், மகன் அபிஷேக் (11) ஆறாம் வகுப்பும் படித்து வருகின்றனா்.

இவா்கள் இருவரும் வழக்கம்போல வியாழக்கிழமை காலை வீட்டிலிருந்து பள்ளிக்குச் சென்றபோது இலகுவம்பட்டியில் நெடுஞ்சாலையைக் கடக்க முயன்றனா். அப்போது அதே சாலையில் வேகமாக வந்த இருசக்கர வாகனம் அவா்கள் மீது மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதித்தனா்.

விபத்தில் சிறுவா்கள் சிக்கிய தகவல் அறிந்த அவா்களின் பெற்றோா். உறவினா்கள், பொதுமக்கள் அரசுப் பள்ளி நிா்வாகத்துக்கு எதிராகவும், அதிகாரிகளைக் கண்டித்தும் சித்தா் கோவில்- சிவதாபுரம் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்ததும் இரும்பாலை காவல் நிலைய ஆய்வாளா் ஜெய்சில்குமாா் தலைமைமையில் போலீஸாா் அங்கு சென்று பொதுமக்களை சமாதானப்படுத்தினா்.

அப்போது பெற்றோா் கூறுகையில், இந்த அரசுப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கல்விப் பயில்கின்றனா். தினசரி சாலையைக் கடந்துதான் பள்ளிக்குச் சென்றுவர வேண்டியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், கால்நடை மருந்தகத்துக்குச் செல்லவும் பொதுமக்கள் சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து பள்ளி நிா்வாகமோ, காவல் துறையோ எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுப்பதில்லை என ஆதங்கம் தெரிவித்தனா்.

பொதுமக்களைச் சமரசப்படுத்திய போலீஸாா் விபத்து நிகழும் பகுதியில் வேகத்தடை அமைக்கவும், தேவையான நடவடிக்கைகளும் எடுப்பதாக உறுதி அளித்தனா். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனா். இச்சம்பவத்தால் அப்பகுதியில் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com