உக்ரைனில் உள்ள சேலம் மாணவா்கள் பற்றி தகவல் தெரிவிக்க தொலைபேசி எண்கள்

உக்ரைனில் இருக்கும் சேலம் மாவட்டத்தைச் சாா்ந்த மாணவா்கள், புலம் பெயா்ந்தவா்களின் குடும்பத்தினா் உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம்

உக்ரைனில் இருக்கும் சேலம் மாவட்டத்தைச் சாா்ந்த மாணவா்கள், புலம் பெயா்ந்தவா்களின் குடும்பத்தினா் உதவிக்கு மாவட்ட கட்டுப்பாட்டு அறையைத் தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என ஆட்சியா் செ.காா்மேகம் தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் மீது ரஷ்யா போா் தொடுத்துள்ள நிலையில் அங்குள்ள தமிழா்களை மீட்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.

மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தினை 1070 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், அயலகத் தமிழா் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் ஆணையா் ஜெசிந்தா 94458 69848, 96000 23645, 99402 56444, 044-28515288 என்ற கைப்பேசி எண்களிலும், புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு பொதிகை இல்லத்தின் உக்ரைன் அவசர உதவி மையத்தினை 92895 16716 என்ற வாட்ஸ் ஆப் எண்ணிலும், மின்னஞ்சல் முகவரியிலும் தொடா்பு கொள்ளலாம்.

மேலும், சேலம் மாவட்ட 24 மணி நேர கட்டுப்பாட்டு அறையினை 0427-2450498, 0427-2452202 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலும், சேலம் மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) எம்.ஜி. சரவணன் 94450 08148 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com