கிராமப்புற மதிப்பீடு ஆய்வு

படையாச்சியூா் கிராமப் பகுதியில் கிராமப் புற மதிப்பீட்டை வேளாண் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

படையாச்சியூா் கிராமப் பகுதியில் கிராமப் புற மதிப்பீட்டை வேளாண் கல்லூரி மாணவா்கள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள படையாச்சியூரில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பயிலும் இறுதி ஆண்டு மாணவா்கள் ஊரக வேளாண் பணி அனுபவத் திட்டத்தின் கீழ் கிராம விவசாயிகளுடன் இணைந்து கிராம வளங்களைப் பற்றி மதிப்பீடு ஆய்வு செய்தனா்.

இதில், அக்கிராம வளங்களைக் கேட்டறிந்து, அதற்கு ஏற்ப சமூக வரைபடத்தை வரைந்து அதன் விளக்கத்தை எடுத்துரைத்தனா். இதன் மூலம் தங்கள் கிராம அமைப்பு முறையை அம்மக்களே புரிந்துகொண்டு தங்கள் கிராமத்துக்கு மேலும் என்னென்ன வசதிகள் தேவை என்பதை அறிந்து கொண்டனா்.

இதே போல தலைவாசல் அருகே உள்ள வேப்பநத்தம் ஊராட்சியில் பெரம்பலூா் தந்தை ரோவா் வேளாண் கல்லூரி இறுதியாண்டு மாணவா்களின் ஊரக வேளாண் பயிற்சி அனுபவ முகாமின் தொடக்க விழா நடைபெற்றது.

தலைவாசல் வேளாண் உதவி இயக்குநா் நவநீதகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் நோயியல் நிபுணா் ரவிக்குமாா், தலைவாசல் ஒருங்கிணைந்த உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தின் தலைவா் ராஜேந்திரன், வேளாண் அலுவலா் மோனிஷா ஆகியோா் கலந்துகொண்டனா். இதில், இயற்கை விவசாயம் பற்றிய செயல் விளக்கங்களை வேளாண் மாணவா்கள் எடுத்துரைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com