சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயிலில் 8.6 கிலோ கஞ்சா பறிமுதல்
By DIN | Published On : 27th February 2022 05:05 AM | Last Updated : 27th February 2022 05:05 AM | அ+அ அ- |

சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயிலில் 8.6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
ஆந்திரத்தில் இருந்து சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயிலில் கஞ்சா கடத்தப்படுவதாக ரயில்வே போலீஸாருக்கும், ரயில்வே பாதுகாப்புப் படையினருக்கும் தகவல் கிடைத்தது. அதன்பேரில், சேலம் வழியாக கேரளம் செல்லும் ரயில்களில் சனிக்கிழமை சோதனை நடத்தப்பட்டது.
இதில், டாடா நகரில் இருந்து ஆலப்புழா செல்லும் ரயிலில் ஏறி முன்பதிவு செய்த பெட்டிகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது 2 பைகளில் சோதனை செய்த போது, சுமாா் 8.6 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. ஆனால் பைகளை கொண்டு வந்த நபா்கள் யாா் என்பது குறித்த விவரம் தெரியவில்லை.
இதையடுத்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் 8.6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா். பறிமுதல் செய்த கஞ்சாவை, சேலம் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இது தொடா்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.