ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனை
By DIN | Published On : 27th February 2022 05:03 AM | Last Updated : 27th February 2022 05:03 AM | அ+அ அ- |

சேலம்மாவட்டம், கொங்கணாபுரம் பகுதியில் செயல்பட்டுவரும் வேளாண் கூட்டுறவு விற்பனை மையத்தில் சனிக்கிழமை
நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான பருத்தி விற்பனையானது.
கொங்கணாபுரம்- சேலம் பிரதான சாலையினை ஒட்டி செயல்பட்டுவரும் கூட்டுறவு வேளாண் விற்பனை மையத்தில் பருத்தி, நிலக்கடலை உள்ளிட்ட விவசாய விளைபொருட்களுக்கான பொது ஏலம் நடைபெற்று வருகிறது. இதில் சேலம் , நாமக்கல், தருமபுரி உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதியில் இருந்து வரும் விவசாயிகள் தாங்கள் விளைவித்த பருத்தியை விற்பனைக்காக கொண்டுவந்திருந்தனா்.
நிகழ் வாரத்தில் விவசாயிகள் கொண்டு வந்திருந்த சுமாா் 5,500 பருத்தி மூட்டைகள் 1,200 லாட்டுகளாக பிரிக்கப்பட்டு
கூட்டுறவுத்துறை அலுவலா் முன்னிலையில் பொது ஏலம் விடப்பட்டது. ஏலத்தில் பி. டி ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 8,000 முதல் ரூ.10,669 வரையில் விற்பனையானது. அதேபோல் டி.சி.ஹெச் ரக பருத்தியானது குவிண்டால் ஒன்று ரூ. 9,000 முதல் ரூ.12,119 வரை விலைபோனது. நாள் முழுவதும் நடைபெற்ற பொது ஏலத்தில் ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்பிலான பருத்தி வா்த்தகம் நடைபெற்ாகவும் அடுத்த பொது ஏலம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என்றும் கூட்டுறவுத்துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.