சேலம்: காவிரி பாசனப் பகுதிகளில் கருகும் செங்கரும்புகள்

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய காவிரி பாசனப் பகுதிகளில், பல ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு இருந்த செங்கரும்புகள் கருகி சேதம் அடையும் அவல நிலை உருவாகி உள்ளது. 
கருகும் செங்கரும்புகள்.
கருகும் செங்கரும்புகள்.

சேலம் மாவட்டத்தின் மேற்கு எல்லையை ஒட்டிய காவிரி பாசனப் பகுதிகளில், பல ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு இருந்த செங்கரும்புகள் கருகி சேதம் அடையும் அவல நிலை உருவாகி உள்ளது. 

சேலம் மாவட்டம், எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர், பில்லு குறிச்சி உள்ளிட்ட காவிரி பாசனப் பகுதிகளில் அதிக அளவான நிலப்பரப்பில் செங்கரும்பினை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர். நடப்பாண்டில் காவிரியில் பாசனத்திற்கு நீர் திறப்பு இருந்த நிலையில் இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த செங் கரும்புகள் நல்ல விளைச்சல் கண்டு அறுவடைக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் தமிழக அரசு தற்போது அறிவித்துள்ள பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்பட்டு வரும் கரும்புகள் நேரிடையாக விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத் துறை வாயிலாக கொள்முதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், காவிரி பாசனப் பகுதியில் உள்ள பெரும்பாலான கரும்பு விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளைந்த கரும்புகளை கூட்டுறவுத் துறை அலுவலர்கள் நேரில் வந்து கொள்முதல் செய்வார்கள் என்ற நீண்ட எதிர்பார்ப்புடன் காத்திருந்தனர். 

இந்நிலையில் உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட கூட்டுறவுத் துறை அலுவலர்கள் யாரும் நேரில் வந்து கரும்பினை கொள்முதல் செய்யாத நிலையில் காவிரி பாசனப் பகுதியில் அறுவடைக்கு தயாராக இருந்த பல ஏக்கர் பரப்பிலான செங்கரும்புகள் கருகி சருகாகும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. காவிரி பாசனப் பகுதியில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்கள் கருகி சேதமடைந்து வரும் நிலை இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் ஆலோசனை மேற்கொள்ளும் விதமாக இன்று திங்கள்கிழமை காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். 

இன்னும் பொங்கல் பரிசு முழுமையாக விநியோகம் செய்யப்படாத நிலையில் அடுத்தகட்ட கரும்பு கொள்முதல் செய்திட தங்களுக்கு முன்னுரிமை கிடைத்திட மாவட்ட ஆட்சியர் வரை செய்திட வேண்டும் என்ற எதிர்பார்ப்புடன் காவிரி பாசனப் பகுதி கரும்பு விவசாயிகள் மாவட்ட ஆட்சியரை சந்திக்க தயாராகி வருகின்றனர். ஆண்டு முழுவதும் விவசாயிகளின் கடும் உழைப்பால் விளைந்த கரும்பு பயிர்கள் வீணாகி கருகி விடக்கூடாது என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com