மேட்டூரில் மால்கோ அலுமினியத் தொழிற்சாலை முன் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்

மேட்டூரில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் அங்கமான மால்கோ தொழிலாளர்கள் ஒப்பந்தப்படி பணப்பலனை வழங்கக்கோரி ஆலை நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மால்கோ அலுமினியத் தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.
மால்கோ அலுமினியத் தொழிற்சாலை முன் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள்.

மேட்டூரில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் அங்கமான மால்கோ தொழிலாளர்கள் ஒப்பந்தப்படி பணப்பலனை வழங்கக்கோரி ஆலை நுழைவாயிலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், மேட்டூரில் மால்கோ என்ற பெயரில் அலுமினியம் உற்பத்தி செய்யும் அலுமினியத் தொழிற்சாலை இயங்கி வந்தது. ஆயிரக்கணக்கானோர்  உற்பத்தியில் ஈடுபட்டு வந்தனர். 2009ஆம் ஆண்டு நிறுவனம் தொழிலாளர்களுக்கு விருப்ப ஓய்வை அறிவித்தது. அப்போது விருப்ப ஓய்வு பெறுபவர்களுக்கு இறுதியாக ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு கொடுக்கப்படும் பணப்பலன்கள் அனைவருக்கும் வழங்கப்படும் என்று நிர்வாகத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.

2009 ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற தொழிலாளிகளுக்கு தலா 6 லட்ச ரூபாய் நிறுவனம் வழங்கியது. அப்போது இந்தத் தொகையை பெறாமல் 40 தொழிலாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவர்களில் 16 நபர்களுக்கு கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நிர்வாகம் தலா ரூ 21. லட்ச ரூபாய் வழங்கியது. ஏற்கனவே விருப்ப ஓய்வு பெற்ற 450 தொழிலாளர்கள் தங்களுக்கும் ஒப்பந்தப்படி ரூ.21  லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என்று நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் நிர்வாகம் கோரிக்கையை ஏற்கவில்லை. ஒப்பந்தப்படி பண பயனை வழங்காததால் இன்று காலை பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் குடும்பத்தினருடன் மால்கோ நிர்வாகத்தில் நுழைவாயிலை முற்றுகையிட்டனர். பின்னர் நிர்வாகத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது நிர்வாகத்திற்கு எதிராகவும் ஒப்பந்தப்படி பணப் பயனை வழங்கக்கோரியும் கோஷம் எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மேட்டூர் இப்பிஎஸ்  95 பென்ஷனர்ஸ் அசோசியேசன் 95 ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன் தலைமையில் முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. வருகிறது இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டத்தை அடுத்து மேட்டூர் காவல் துணை கண்காணிப்பாளர் உதயகுமார் தலைமையில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com