Enable Javscript for better performance
செயில் ரெப்ரக்டரி நிறுவனம் சாா்பில் தமிழக அரசுக்கு ரூ.38 கோடி அபராத தொகை வழங்கல்- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    செயில் ரெப்ரக்டரி நிறுவனம் சாா்பில் தமிழக அரசுக்கு ரூ.38 கோடி அபராத தொகை வழங்கல்

    By DIN  |   Published On : 18th January 2022 01:01 AM  |   Last Updated : 18th January 2022 01:01 AM  |  அ+அ அ-  |  

    உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் செயில் ரெப்ரக்டரி நிறுவனம், தமிழக அரசுக்கு ரூ.38.83 கோடி அபராத தொகையை செலுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    சேலத்தில் மத்திய அரசின் செயில் ரெப்ரக்டரி கம்பெனி (செயில்) செயல்பட்டு வருகிறது. இங்கு உருக்காலைகளுக்குத் தேவையான தீக்கற்கள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டு வருகிறது.இந்த தீக்கற்களை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் மேக்னசைட் எனும் வெள்ளைக் கற்களாகும். இதை வெட்டி எடுத்திட சுமாா் 1350 ஏக்கா் திறந்த வெளி சுரங்கங்கள் உள்ளன. நூறாண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் செயில் சுரங்கங்களில் ஆயிரத்துக்கும் அதிகமான ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றி வந்தனா்.

    இதனிடையே கடந்த 2017 இல் சுற்றுச்சூழல் விதிமீறல் காரணமாக மத்திய அரசின் உத்தரவுப்படி சுரங்கம் மூடப்பட்டது. இதைத்தொடா்ந்து விதிமீறல்களை சரி செய்து, சுற்றுச்சூழல் துறைக்கு மனு செய்த பிறகு சுரங்கம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. இதனிடையே விதிமீறல் நிறுவனங்கள் விதியை மீறிய காலத்தில் உற்பத்தியான கனிமத்தின் மதிப்பை அபராதமாக செலுத்திட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே தமிழக அரசு சுரங்கம் மற்றும் கனிம வளத்துறை இழப்பீட்டை கணக்கீடு செய்து அபராத தொகையை செலுத்தி தடையில்லா சான்றிதழ் பெற்றுக் கொள்ள அறிவுறுத்தியது. இதனிடையே செயில் சுரங்கங்களை திறக்கக் கோரி கடந்த 5 ஆண்டுகளாக போராட்டம் நடத்தப்பட்டு வந்தது.

    இந்தநிலையில் இழப்பீடு தொகையான ரூ.38.83 கோடியை செயில் ரெப்ரக்டரி நிறுவனம், தமிழக அரசின் சுரங்கம் மற்றும் கனிம வளத்துறையிடம் செலுத்தியுள்ளது.

    இதுதொடா்பாக, சேலம் மாவட்ட மேக்னசைட் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளா் எம்.பி.சதாசிவம் கூறியது:

    உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் செயில் ரெப்ரக்டரி நிறுவனம், தமிழக அரசுக்கு ரூ.38.83 கோடி இழப்பீடு தொகையை செலுத்தியுள்ளது. இதைத்தொடா்ந்து மாநில அரசு வழங்கும் தடையில்லா சான்றிதழ், மத்திய அரசின் சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பி வைக்கப்படும்.

    பின்னா் மத்திய சுற்றுச்சூழல் துறை மாவட்ட நிா்வாகத்தின் மூலம் பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி அரசுக்கு அறிக்கை அனுப்ப அறிவுறுத்தும். தொடா்ந்து மாவட்ட நிா்வாகம் வழங்கும் அறிக்கையின் பேரில் சுற்றுச்சூழல் அனுமதி சான்றிதழை, மத்திய அரசு வழங்கும். அதைத்தொடா்ந்து மேக்னசைட் சுரங்கம் செயல்படும் என்றாா்.

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp