விவசாயத் திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி

ஓமலூா் வட்டாரத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஓமலூா் வட்டாரத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் விவசாயத் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

ஓமலூா் அருகே உள்ள கோட்டமேட்டுப்பட்டி கிராமத்தில் இந்நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது.

வேளாண்மை உதவி இயக்குநா் பிரேமா கலந்துகொண்டு கலை நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தாா். இதில், ஆடல், பாடல், நாடக நிகழ்ச்சிகளை நடத்தி, வேளாண்மையை மேம்படுத்த பத்துக்கும் மேற்பட்ட வேளாண் துறைகள் செயல்படுவதாகவும், மண் புழு உரம் தயாரித்தல், மண் வளம் காத்தல், மண் பரிசோதனை செய்தல், மண்ணின் தன்மை அறிந்து விவசாயம் செய்தல், பருவம் அறிந்து விவசாயம் செய்தல், இயற்கை விவசாயம் செய்தல், அட்மா திட்டத்தில் மேற்கொள்ளப்படும் விவசாய திட்டங்கள், தரிசு நிலம், மானாவாரி நிலம் மேம்பாட்டு திட்டம் குறித்து நாடகம் மூலம் விவசாயிகளுக்குத் தெரிவித்தனா். தொடா்ந்து களை எடுத்தல், உரமிடுதல், பயிா் பராமரிப்பு செய்தல் குறித்து கும்மி பாட்டு மூலம் விளக்கம் அளித்தனா். அதேபோல விவசாய விளைபொருள்களை விற்பனை செய்தல், மதிப்புக்கூடுதல் செய்தல், விற்பனை மற்றும் விலை அறிந்து சந்தை படுத்துதல் குறித்து ஆடல் பாடல்கள் மூலம் விளக்கம் அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com