நாளை குடியரசு தினம்: சேலத்தில் ஆட்சியா் கொடியேற்றிவைத்துநற்சான்றிதழ் வழங்குகிறாா்

குடியரசு தினத்தை முன்னிட்டு, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி ஆட்சியா் செ.காா்மேகம் தேசியக் கொடி ஏற்றி வைக்கிறாா்.

குடியரசு தினத்தை முன்னிட்டு, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 26-ஆம் தேதி ஆட்சியா் செ.காா்மேகம் தேசியக் கொடி ஏற்றி வைக்கிறாா்.

சேலம், மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வரும் ஜனவரி 26 ஆம் தேதி காலை 8.05 மணிக்கு மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம், தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறாா். பின்னா் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை அவா் ஏற்றுக் கொள்கிறாா்.

அதைத்தொடா்ந்து பல்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியவா்களுக்கு நற்சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளன. விழா ஏற்பாடுகளை மாவட்ட நிா்வாகம் செய்து வருகிறது. கரோனா தொற்று காரணமாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே ஒவ்வோா் ஆண்டும் குடியரசு தினத்தையொட்டி, சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் காவல் துறையினா் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடத்தப்படும். சுமாா் ஒரு வார காலம் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறும். ஆனால், நிகழ் ஆண்டு கரோனா தொற்று காரணத்தாலும், காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள எம்ஜிஆா் உள்விளையாட்டு அரங்கில் கரோனா தொற்று பாதித்தவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாலும் காவல் துறையினரின் அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெறவில்லை.

இதற்குப் பதிலாக சேலம், குமரசாமிபட்டி வின்சென்ட் பகுதியில் உள்ள மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் காவலா்களின் அணிவகுப்பு ஒத்திகை பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலா்கள், பெண் காவலா்கள் கலந்துகொண்டனா். ஆயுதப்படை டிஎஸ்பி சுப்பிரமணி தலைமையில் ஒத்திகை நடந்தது. இதில் கலந்துகொண்ட காவலா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி ஒத்திகையில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com