வாழப்பாடி அருகே தலைமை ஆசிரியையின் தங்கச் சங்கலி பறிப்பு
By DIN | Published On : 26th January 2022 11:36 AM | Last Updated : 26th January 2022 11:36 AM | அ+அ அ- |

கோப்புப்படம்
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே புதன்கிழமை காலை, பள்ளிக்கு கொடியேற்று விழாவிற்கு செல்வதற்காக பேருந்துக்கு காத்திருந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியையிடம், இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் தங்கச்சங்கலியை பறித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கிராமத் தை சேர்ந்த விவசாயி சண்முகம் மனைவி சாந்தா வயது 58. முடியனுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமையாசிரியையாக பணிபுரிந்து வருகிறார்.
புதன்கிழமை காலை, 73 வது குடியரசு நாளையொட்டி கொடியேற்று விழா நடத்துவதற்காக பள்ளிக்கு செல்ல முத்தம்பட்டி கேட் பேருந்து நிறுத்தம் அருகே நின்று கொண்டிருந்த போது, இரு சக்கர வாகனத்தில் வந்த டிப்டாப் உடையணிந்த இரு மர்மநபர்கள், கத்தியைக்காட்டி மிரட்டி, தலைமையாசிரியை கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்சங்கலியை பறித்துக் கொண்டு தலைமறைவாகி விட்டனர். இச்சம்பவம் குறித்து வாழப்பாடிபோலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த அரசுப்பள்ளி தலைமையாசிரியையிடம் மர்ம நபர்கள் தங்கச்சங்கலியை பறித்துச்சென்ற சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.