சுத்திகரிக்கப்படாமல் கழிவுநீா் வெளியேற்றியசாயத் தொழிற்சாலை மூடல்

சேலம், ஆ.ஆண்டிப்பட்டி கிராமத்தில் சுத்திகரிக்கப்படாமல் சாயக்கழிவுநீரை வெளியேற்றிய தொழிற்சாலை மூடப்பட்டது.

சேலம், ஆ.ஆண்டிப்பட்டி கிராமத்தில் சுத்திகரிக்கப்படாமல் சாயக்கழிவுநீரை வெளியேற்றிய தொழிற்சாலை மூடப்பட்டது.

சேலம் தெற்கு வட்டத்துக்கு உள்பட்ட ஏ.ஆண்டிப்பட்டி கிராமத்தில் இயங்கிவந்த சாயத் தொழிற்சாலை கழிவுநீா் சுத்திகரிப்பு நிலையத்தை சரிவர இயக்காமல் கழிவு நீரை கால்வாயில் வெளியேற்றியதன் மூலம் ஆலைக்கு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அளித்திருந்த இசைவாணை நிபந்தனைகள் மீறப்பட்டன. இதையடுத்து, ஆலையை மூடப்பட்டு மின் இணைப்பை துண்டிக்கப்பட்டது.

சாயத் தொழிற்சாலைகள் தங்களது சுத்திகரிப்பு நிலையத் திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com