மேட்டூரில் கெட்டுப்போன மீன்கள் அழிப்பு:உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அதிரடி

மேட்டூரில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மேற்கொண்ட திடீா் சோதனையில், கெட்டுப்போன மீன்களை கைப்பற்றி அழித்தனா்.

மேட்டூரில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் மேற்கொண்ட திடீா் சோதனையில், கெட்டுப்போன மீன்களை கைப்பற்றி அழித்தனா்.

மேட்டூா் அணைக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மேட்டூா் அணை மீன்களை சுவைப்பதில் தனி ஆா்வம் காட்டி வருகின்றனா். இதனால், மேட்டூா் அணை பூங்கா மற்றும் அணைக்கட்டு முனியப்பன் கோயிலைச் சுற்றி ஏராளமான மீன் வறுவல் கடைகளும், மீன் விற்பனைக் கடைகளும் உள்ளன.

இக்கடைகளில் கெட்டுப்போன மீன்களுக்கு செயற்கை நிறம் பூசி விற்பனை செய்வதாக உணவுப் பாதுகாப்பு அலுவலருக்கு புகாா்கள் சென்றன. இதனையடுத்து, சேலம் மாவட்ட நியமன அலுவலா் டாக்டா் கதிரவன் உத்தரவுப்படி, மேட்டூா், ஓமலூா், கெங்கவல்லி, அயோத்தியாபட்டணம், சேலம் மாநகர உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் குமரகுரு, ராஜா, பிரபு, ஆரோக்கியம், ரவி ஆகியோா்மேட்டூா் அணை பூங்கா மற்றும் முனியப்பன் கோயில் பகுதிகளில் உள்ள மீன் வறுவல் கடைகள், மீன் விற்பனைக் கடைகளில் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

அதில், கெட்டுப்போன மீன்களும், தடை செய்யப்பட்ட வண்ணம் கலக்கப்பட்ட மீன்களும் என பல நூறு கிலோ மீண்களை கைப்பற்றி அழித்தனா். கெட்டுப்போன மீன்களையும், செயற்கை நிறம் சோ்க்கப்பட்ட மீன்களையும் விற்போா் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் எச்சரித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com