வாழப்பாடியில் புத்தகக் கண்காட்சி தொடங்கியது!
By DIN | Published On : 22nd July 2022 06:23 PM | Last Updated : 22nd July 2022 06:23 PM | அ+அ அ- |

வாழப்பாடியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி தொடக்க விழா.
வாழப்பாடி: சேலம் மாவட்டம் வாழப்பாடியில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் மற்றும் நெஸ்ட் அறக்கட்டளை இணைந்து நடத்தும் இரண்டாமாண்டு புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது. வரும் ஜூலை 31 வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது.
வாழப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இரண்டாமாண்டு புத்தகக் கண்காட்சி தொடக்க விழாவிற்கு, நியூசெஞ்சுரி புத்தக நிறுவன மண்டல மேலாளர் ரங்கராஜன் வரவேற்றார். வாழப்பாடி நெஸ்ட் அறக்கட்டளை தலைவர் பெரியார் மன்னன் தலைமை வகித்தார்.
வாழப்பாடி பேரூராட்சி மன்றத் தலைவர் ச.கவிதா சக்கரவர்த்தி புத்தகக் கண்காட்சியை திறந்து வைத்தார். வாழப்பாடி வட்டார ஆத்மாக்குழு தலைவர் சக்கரவர்த்தி, அரிமா சங்க பட்டயத் தலைவர் சந்திரசேகரன், வட்டார கல்வி அலுவலர்கள் நெடுமாறன், வித்யா, வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் பாண்டியன், துணைத் தலைவர் ஆட்டோ சுரேஷ், தலைமை ஆசிரியை சத்தியகுமாரி, நெஸ்ட் அறக்கட்டளை செயலாளர் ஜவஹர் ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி புத்தக விற்பனையை தொடங்கி வைத்தனர்.
இந்த விழாவில், ஊர் கவுண்டர் மூர்த்தி, பேரூராட்சி துணைத் தலைவர் எம்ஜிஆர் பழனிசாமி, தமிழ் அமுது மன்றத் தலைவர் தேவராஜன், இலக்கிய பேரவை நிர்வாகிகள் சிவ.எம்கோ, மா.கணேசன், தனியார் பள்ளி தாளாளர்கள் செல்லதுரை, நடராஜன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் கலைஞர்புகழ், பிரபாகரன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சாந்தாகுமாரி சரவணன், ராணி மாது, ரஞ்சித்குமார், துளி அறக்கட்டளை ராஜசேகரன், அரிமா சங்க நிர்வாகிகள் கல்கி கிருஷ்ணமூர்த்தி, முருகன், ஆசிரியர் கோ.முருகேசன், ஷபிராபானு , சோமம்பட்டி மகேஸ்வரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிக்க: உதகை: கூண்டில் அகப்பட்ட 2 கரடிகள்!
இவ்விழாவில், வாழப்பாடி வாசவி கிளப் சார்பில், நிர்வாகிகள் சாய்ராம், திலக் ஆகியோர் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கினர். நிறைவாக, நியூ செஞ்சுரி சேலம் கிளை மேலாளர் சத்தியசீலன் நன்றி கூறினார்.
இந்த புத்தகக் கண்காட்சி வரும் ஜூலை 31-ஆம் தேதி வரை தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். சலுகை விலையில் அனைத்து துறை சார்ந்த புத்தகங்களும் கிடைக்கும். முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை கடைபிடித்து, பொதுமக்கள், மாணவர்கள், குழந்தைகள் அனைவரும் இந்த புத்தக கண்காட்சியை கண்டுகளிக்கலாமென, புத்தகக் கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.