சங்ககிரி வட்டப்பகுதிகளில் இடியுடன் கூடிய  கன மழை 

சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் சங்ககிரி, தேவூர், அரசிராமணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் வியாழக்கிழமை இரவு  இடியுடன் கூடிய 192.2 மி.மீ மழை பெய்தது.
சங்ககிரி வட்டம், தேவூர் அருகே  உள்ள அரசிராமணி, குஞ்சாம்பாளையம், நாச்சம்பட்டி  ஏரியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையால்  தண்ணீர் தேங்கி நின்கின்றன.
சங்ககிரி வட்டம், தேவூர் அருகே  உள்ள அரசிராமணி, குஞ்சாம்பாளையம், நாச்சம்பட்டி  ஏரியில் வியாழக்கிழமை இரவு பெய்த மழையால்  தண்ணீர் தேங்கி நின்கின்றன.

சங்ககிரி: சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டம் சங்ககிரி, தேவூர், அரசிராமணி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமப்பகுதிகளில் வியாழக்கிழமை இரவு  இடியுடன் கூடிய 192.2 மி.மீ மழை பெய்தது.

சங்ககிரி வட்டம் தேவூர் அருகே சென்றாயனூர், பெரமச்சிபாளையம், ஒடசக்கரை, வெள்ளாளபாளையம், அம்மாபாளையம், பாங்கிகாடு, கோனேரிபட்டி, காணியாளம்பட்டி, செட்டிபட்டி, கொட்டாயூர், பூமணியூர், கல்வடங்கம், மேட்டுப்பாளையம், வட்ராம்பாளையம் ,காவேரிபட்டி, மோட்டூர், சுண்ணாம்புகரட்டூர், புள்ளாகவுண்டம்பட்டி, பொன்னம்பாளையம், நல்லங்கியூர், பாலிருச்சம்பாளையம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் வியாழக்கிழமை  இரவு திடீரென இடியுடன் கூடிய 98.2 மி.மீ மழையும்,  சங்ககிரி பகுதிகளில் 94 மி.மீ மழையும் பெய்தது. 

சங்ககிரி வட்டம், தேவூர் அருகே  உள்ள அரசிராமணி, குஞ்சாம்பாளையம், நாச்சம்பட்டி  ஏரி வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நிரம்பி தண்ணீர் வெளியே செல்கின்றன.
சங்ககிரி வட்டம், தேவூர் அருகே  உள்ள அரசிராமணி, குஞ்சாம்பாளையம், நாச்சம்பட்டி  ஏரி வியாழக்கிழமை இரவு பெய்த மழையால் நிரம்பி தண்ணீர் வெளியே செல்கின்றன.

இதனையடுத்து இரவு முழுவதும் தொடர்ந்து குளிர்ந்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. விவசாய நிலங்களில் தண்ணீர் தேங்கி நின்றது.  கனமழையைத் தொடந்து தேவூரை அடுத்த  அரசிராமணி, குஞ்சாம்பாளையம், நாச்சம்பட்டி ஏரியில் மழைநீர் தேங்கி வழிந்து செல்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com