காவிரி உபரி நீரேற்று திட்டம்: கோனூர் கிராம ஏரிகளுக்கு தண்ணீர் கோரி உண்ணாவிரதம்

காவிரி உபரி நீர் நீரேற்று திட்டத்தில் கோனூர் கிராமத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் விடக்கோரி அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.
காவிரி உபரி நீரேற்று திட்டம்: கோனூர் கிராம ஏரிகளுக்கு தண்ணீர் கோரி உண்ணாவிரதம்

மேட்டூர்: காவிரி உபரி நீர் நீரேற்று திட்டத்தில் கோனூர் கிராமத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் விடக்கோரி அடையாள உண்ணாவிரதம் மேற்கொண்டனர்.

மேட்டூர் அணை நிரம்பியதும் உபரியாக வரும் நீரை, நீரேற்று திட்டம் மூலம் 100 ஏரிகளுக்கு தண்ணீர் நிரப்பும் திட்டம் ரூ 565 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கோனூர் கிராமத்தில் பிரதான நீரேற்று நிலையம் அமைந்துள்ளது. ஆனாலும் கோனூர் கிராமத்தில் உள்ள சந்தைதானம்பட்டி செக்கான் ஏரி, ஆண்டி கரை குட்டை, பூரல்கோட்டை புது ஏரி, மேட்டு தானம் பட்டி குட்டை, கூலையூர் கணக்கன்குட்டை, புது வேலுமங்கலம்-வீரனூர் ஓடை ஆகிய நீர்நிலைகள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. 

கோனூர் கிராமத்தில் நீர்த்தேக்கம் அமைந்திருந்தும், பிரதான நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, கோனூர் கிராம மக்களின் விவசாய நிலங்களுக்கு மேட்டூர் அணை நீர்த்தேக்கத்தால் கோனூர் கிராம மக்களுக்கு பயன் ஏதுமில்லை.

உபரி நீர் திட்டம் செயல்படுத்தும் கிராமத்தில் உள்ள ஏரிகளை உபரிநீர் மூலம் நிரப்பக் கோரி கோனூர் கிராமம் கிணற்றுப் பாசனம் மற்றும் மானாவாரி விவசாயிகள் சங்கத்தினர் இன்று அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். போராட்டத்தை வாழ்த்தி மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கருணாகரன் ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். 

சமத்துவபுரம் பேருந்து நிறுத்தத்தில் அமைக்கப்பட்ட பிரம்மாண்ட பந்தலில் ஏராளமான கிராம மக்கள் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் பங்கேற்றனர். விவசாயிகள் சங்க தலைவர் குமார், செயலாளர் வேல்முருகன், மேச்சேரி ஊராட்சி ஒன்றிய குழு முன்னாள் துணைத் தலைவர் ராமகிருஷ்ணன், வீரக்கல் புதூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் எமரால்டு வெங்கடாசலம் மற்றும் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com