சேலம் நாய்க்கண்காட்சியில் 450 நாய்கள் பங்கேற்பு

சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்க்கண்காட்சியில் 450 நாய்கள் பங்கேற்றன.
சேலத்தில் நடைபெற்ற நாய்க்கண்காட்சி.
சேலத்தில் நடைபெற்ற நாய்க்கண்காட்சி.

சேலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான நாய்க்கண்காட்சியில் 450 நாய்கள் பங்கேற்றன.

சேலம் அக்மே கென்னல் கிளப் சார்பில் ஆண்டுதோறும் சாம்பியன்ஷிப் போட்டிக்கான நாய்க் கண்காட்சி நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றின் காரணமாக கண்காட்சி நடைபெறாமல் இருந்தது. இதனையடுத்து இந்த வருடம் 12ஆம் ஆண்டு நாய்கண்காட்சி சிறுமலர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இந்தியாவின் மும்பை, கொல்கத்தா, பெங்களுரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்தும் தமிழ்நாட்டின் நாய்களான ராஜபாளையம் சிப்பிப்பாறை உள்ளிட்ட நாய்களும், அமெரிக்கா, தாய்லாந்து உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் சுமார் 450 நாய்கள் இதில் பங்கேற்றன. 

வெளி நாட்டு நாய்களான லேப்பர்டார் ஹஸ்கி, ஐரிஸ் செட்டர், ஸ்மூத் ஃபாக்ஸ் டெரியர், பிரான்ச் புல் டாக், புல் மஸ்டிப், செயின்ட் பெர்னார்ட் உள்ளிட்ட அறிய வகை நாய்கள் மற்றும் மினியேச்சர் பின்சர், புல்டாக் டால்மேசன், ஜெர்மன் ஷெப்பர்ட், சைபீரியன் ஹஸ்கி, ராஜாபாளையம் என முப்பது வகையான நாய்கள் பங்கேற்றன. இதில் நாய்களின் இனத்திற்கேற்ப குரூப்பாக பிரித்து போட்டிகள் நடந்தது. நாயின் இனம், அந்த இனத்திற்கேற்ப   நடை,  தோற்றம்,  உயரம், எடை, ஓட்டம், சுறுசுறுப்பு ஆகியவற்றை கொண்டு நீதிபதிகள் சிறந்த நாய்களை தேர்வு செய்தனர். 

வெற்றிப்பெற்ற நாய்களுக்கு போட்டியின் முடிவில் பதக்கங்களும், கோப்பைகளும் வழங்கப்பட்டன. வெளி மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட நாய்கள் குளிரூட்டும் பெட்டகத்தில் கொண்டுவரப்பட்டன. நாய்களை வளர்ப்போர் அதனை பராமரிக்கும் முறையை கண்டு பார்வையாளர்கள் வியந்து ரசித்தனர். இதில் சிறந்த நாய்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்த கண்க்காட்சியில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று அறிய வகை நாய்களை கண்டு ரசித்தனர். 

மேலும் போட்டியை காண வந்த பார்வையாளர்கள் கூறும்போது, நாய்க்கண்காட்சியை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. அதன் நடை, மற்றும் பாவனைகள் மிகவும் ரசிக்கத்தக்கதாக உள்ளது. இந்த நாய்களை பார்க்கும்போது நமக்கும் நாய் வளர்க்க ஆவலாக உள்ளது. நாயை வளர்பவர்கள் அவர்கள் வீட்டில் குழந்தைகளை போல வளர்த்து வருவதாகவும் ஒவ்வொரு நாயும் குறைந்தது ஐம்பதாயிரம் முதல் பல லட்ச ருபாய் வரை விலை இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது என்றும் தெரிவித்தனர்.

மேலும் சாதாரணமாக தொலைகாட்சி மற்றும் திரைபப்டத்தில் மட்டுமே இது போன்ற நாய்களை பார்த்து உள்ளதாகவும் தற்போது நேரில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் தெரிவித்தனர்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com