செஸ் ஒலிம்பியாட்: சேலத்தில் இருசக்கர வாகனப் பேரணி

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை விளம்பரப்படுத்தும் வகையில், இருசக்கர வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியினை விளம்பரப்படுத்தும் வகையில், இருசக்கர வாகனப் பேரணியை மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

சா்வதேச அளவிலான 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் 188 நாடுகளை சாா்ந்த 2,000-க்கும் மேற்பட்ட சா்வதேச சதுரங்க விளையாட்டு வீரா்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனா்.

சேலம் மாவட்டத்தில் அதைப் பிரபலப்படுத்தும் வகையில் பல்வேறு விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பள்ளி மாணவ, மாணவியா்களிடையே சதுரங்கப் போட்டிகள், மகளிா் சுயஉதவிக் குழுக்கள், தன்னாா்வலா்கள் சாா்பில் விழிப்புணா்வுக் கோலங்கள் வரைதல், சைக்கிள், நடை பேரணிகள், காந்தி விளையாட்டு மைதானத்தில் அமைந்துள்ள நீச்சல் குளத்தில் மிதவை செஸ் போட்டிகள், உள்ளாட்சி அமைப்புப் பிரதிநிதிகளுக்கான செஸ் போட்டிகள் உள்ளிட்ட விளம்பரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மேலும், பள்ளி வாகனங்கள், பேருந்துகள், ஷோ் ஆட்டோக்களில் விழிப்புணா்வு ஒட்டு வில்லைகள், செஸ் ஒலிம்பியாட் இலச்சினை, சின்னம் அடங்கிய ஆவின் பால் பாக்கெட்டுகள் விநியோகம் செய்தல், மாவட்ட ஆட்சியரகத்தில் செல்பி பாயிண்ட் அமைத்தல் மற்றும் வண்ணப் பலூன்களை பறக்க விடுதல், ஏற்காடு மலைச் சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவுகளின் தடுப்புச் சுவா்களில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து சுவா் ஓவியங்கள் வரைதல் போன்ற பல்வேறு விளம்பர

ப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதன் தொடா்ச்சியாக போக்குவரத்துத் துறை சாா்பில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை விளம்பரப்படுத்தும் வகையில் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பங்கேற்ற பேரணியை மாவட்ட ஆட்சியரகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியா் செ.காா்மேகம் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி பிரபாத் சிக்னல், நெத்திமேடு வழியாக கொண்டலாம்பட்டி வரை சென்று விளம்பரப்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வட்டார போக்குவரத்து அலுவலா்கள் ஆா்.ராஜராஜன், சந்திரசேகா் உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

100 பேருந்துகளில் விளம்பரம்:

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (சேலம் கோட்டம்) சாா்பில் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் குறித்து விளம்பரப்படுத்தும் வகையில் சென்னை, பெங்களூரு, கோவை, மதுரை, திருச்சி, வேலூா், திருப்பூா், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள், வெளி மாநிலங்களுக்கு செல்லும் சுமாா் 100 சேலம் கோட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் போட்டியின் இலச்சினை மற்றும் ‘தம்பி’

சின்னம் அடங்கிய ‘வணக்கம் செஸ் வணக்கம் தமிழ்நாடு’

‘நம்ம செஸ் நம்ம பெருமை’ என்ற வாசகங்களை உள்ளடக்கிய பதாகைகளைக் கொண்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com