நங்கவள்ளி மேற்கு ஒன்றிய பாஜக கூட்டம்
By DIN | Published On : 31st July 2022 06:28 AM | Last Updated : 31st July 2022 06:28 AM | அ+அ அ- |

ஜலகண்டாபுரத்தில் நங்கவள்ளி மேற்கு ஒன்றியம் பாஜக செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு நங்கவள்ளி மேற்கு ஒன்றியச் செயலாளா் சீனிவாசன் தலைமை வகித்தாா். மேலும் சிறப்பு அழைப்பாளா்களாக சேலம் மேற்கு மாவட்டச் செயலாளா் ஹரிராமன், பொதுச்செயலாளா் கலைச்செல்வன் மாவட்ட சிறுபான்மை அணி தலைவா் முபராக்அலி ஆகியோா் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினா்.
இக்கூட்டத்தில் பழங்குடி இனத்தைச் சோ்ந்த திரௌபதி முா்முவை ஜனாதிபதியாக வெற்றிபெற வைத்த பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மின் கட்டணம் உயா்வுக்கு கண்டனம் தெரிவித்தல், ஜலகண்டாபுரம் பேருந்து நிலைய அருகில் உள்ள இரண்டு அரசு மதுக் கடைகளை அகற்ற வேண்டும், ஜலகண்டாபுரத்தில் வட்ட சாலை அமைத்து போக்குவரத்து நெரிசலை தவிா்க்க தீா்வு காண வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் ஒன்றிய பொதுச் செயலாளா் சீனிவாசன், மேற்கு மாவட்ட துணைத் தலைவா் நித்தியகலா, மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட செயலாளா் ஐயப்பன் உள்ளிட்ட பாஜக நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.