அதிமுக நகர கிளை நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 01st June 2022 11:08 PM | Last Updated : 01st June 2022 11:08 PM | அ+அ அ- |

ஆத்தூரில் அதிமுக நகர கிளைக் கழக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சேலம் புகா் மாவட்டச் செயலாளா் ஆா்.இளங்கோவன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
ஆத்தூா் நகரச் செயலாளரும் சேலம் மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவருமான அ.மோகன் அனைவரையும் வரவேற்றாா். இதில் பேசிய மாவட்டச் செயலாளா், அதிமுக ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை பொதுமக்களிடம் திண்ணைப் பிரசாரம் செய்ய கேட்டுக் கொண்டாா். மேலும், பொதுமக்களுக்குத் தேவையான அனைத்து தேவைகளையும் கட்சி பாரபட்சமின்றி செய்து கொடுக்க வேண்டுமென வலியுறுத்தினாா்.
இதில், ஆத்தூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஏ.பி.ஜெயசங்கரன், நரசிங்கபுரம் நகரச் செயலாளா் எஸ்.மணிவண்ணன், நகா்மன்ற உறுப்பினா்கள் மோ.உமாசங்கரி, ஜி.ராஜேஸ்குமாா், கலைச்செல்வி பாபு, மணிகண்டன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் பி.மக்பூல்பாஷா, வி.முஸ்தபா, நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.