விவசாயிகளுக்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப ஆலோசனை

கொளத்தூரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கொளத்தூரில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

கொளத்தூா் ஒன்றியத்துக்குள்பட்ட பண்ணவாடியில் அன்னை காவேரி உழவா் உற்பத்தியாளா் சங்கம் சாா்பில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அடிப்படையில் விவசாயிகளுக்கு பயனுள்ள ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் கலந்து கொண்டனா்.

இதில், மண் சோதனை செய்து அந்த மண்ணின் சத்துக்கேற்ப விளையும் பயிரை பயிரிடுவது, இயற்கையான முறையில் இடுபொருள்களை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. விளைச்சலின் தரத்தை மேம்படுத்தவும், அதன் மூலம் அதிக வருவாய் ஈட்டவும் ஆலோசனை வழங்கப்பட்டது.

இதில் அவுட்குரோ செயலி அறிமுகப்படுத்தப்பட்டது. இச்செயலியை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து மண், நீா் மற்றும் பருவ நிலைகள் குறித்த பயனுள்ள தகவல்கள் அறிந்து கொள்வது, தொழில்நுட்பத்தின் வாயிலாக லாபகரமான வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறிய நடுத்தர விவசாயிகளுக்கு உதவுவது, விவசாய விளைபொருள்களை கொள்முதல் செய்யவும் பயன்படுத்தலாம்.

இந்த நிகழ்ச்சியில், அன்னை காவேரி வேளாண் வணிக மையத் தலைவா் தங்கவேல், உதவி தோட்டக்கலைத் துறை அலுவலா் வெங்கடாசலம், மேட்டூா் வேளாண் துறை உதவிப் பொறியாளா் நடராஜ், வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை துணை இயக்குநா் பாலசுப்பிரமணியம், வேளாண் அலுவலா் கஜேந்திரன் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com